கோடை காலங்களில் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள் சில

கோடை காலத்தில் உடலுக்கு போதிய நீர் பற்றாக்குறையால் பல பிரச்னைகளை சந்திக்க நேரிடும். இது போன்ற உடல் உபாதைகளை தடுக்கவும், உடலை புத்துணர்ச்சியுடன் வைத்துக்கொள்ளவும் உதவும் சில உணவுகளைப் பற்றி பார்க்கலாம்.

பால் சார்ந்த பொருட்களை கோடை காலங்களில் எடுத்துக்கொள்வது நல்லது. அதாவது, மோர், தயிர் போன்றவை. இவற்றில் கால்சியம், வைட்டமின் டி ஆகிய சத்துக்கள் நிறைந்திருப்பதால், உடலுக்கு வலிமை கொடுப்பதுடன், உடல் ஊபாதைகளிலிருந்தும் பாதுகாப்பு கொடுக்கிறது. புரதம் அதிகம் கொண்ட பால் உடல் பருமனை குறைப்பத‌ற்கும் உதவுகிறது.


ஆரஞ்சு பழத்தில் அதிகப்படியான வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுவதுடன்,  கோடை காலத்தில் ஏற்படும் உடல் நீர் பற்றாக்குறையை சரி செய்கிறது.

நார்ச்சத்து நிறைந்த கோடை காலத்தில் மட்டுமே கிடைக்க கூடிய அற்புத நீர் பழங்களில் தர்பூசணி முதலிடத்திலுள்ளது. இந்த பழத்தை கோடையில் சாப்பிடுவதனால், உடலுக்கு தேவையான நீர்ச்சத்து கிடைப்பதுடன்.உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களும் கிடைக்கிறது.

உயர் இரத்த அழுத்தப் பிரச்னைக்கு சிறந்த தீர்வாக இருக்க கூடியதும், நார்ச்சத்து, வைட்டமின் சி நிறைந்துள்ளதுமான‌
ஸ்ட்ராபெர்ரி  சாப்பிடும்போது, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

லிச்சி  பழங்கள்  அதிகப்படியான நீர்ச்சத்தையும், நார்ச்சத்தையும் கொண்டுள்ளது இந்த பழங்கள் கொடை காலத்தில் உண்டாகும் செரிமான பிரச்னைகளை சரி செய்ய உதவுகிறது. மேலும், உடலில் நீர் பற்றாக்குறையை சரிசெய்து புத்துணர்வுடன் செயல்பட உதவுகிறது. இது புற்று நோய்,  உடல் பருமன், கண் நோய்கள், சரும கோளாறுகளுக்கு எதிராக செயல்படுகிறது.

ஆண்டி-ஆக்ஸிடண்ட் நிறைந்திருக்கும் வெள்ளரியில் கலோரிகள் மிகவும் குறைவு என்பதால் உடல் எடை குறைக்க உதவுவதுடன், உடலுக்கு தேவையான நீர்ச்சத்துக்களையும் கொடுக்கிறது.

கோடை காலங்களில்மட்டுமே அதிக அளவில் கிடைக்க கூடிய இயற்கை கொடை தான் நுங்கு. இந்த நுங்கில் அதிக அளவு வைட்டமின் பி, சி, இரும்புச்சத்து, கால்சியம்,சோடியம், மக்னீசியம், பொட்டசியம், அமிலம் மற்றும் புரதம் போன்ற சத்துக்கள்  காணப்படுகின்றன.  இது உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் கொடுப்பதுடன் வெயில் காலங்களில் சருமத்தில் ஏற்படும் கோளாறுகளை சரி செய்ய உதவுகிறது.

வெயில் காலங்களில் கட்டாயம் சாப்பிட வேண்டியவற்றில் பீச் பழங்களும் ஒன்று. இந்த பழங்களில் கார்போஹைட்ரேட், வைட்டமின் சி, ஏ, ஈ, நியாசின், பொட்டாசியம், பாஸ்பரஸ், காப்பர் மற்றும் மாங்கனீஸ் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிக அளவிலுள்ளன. பீச் பழங்களை சாப்பிடுவதனால், உடல் நீர் இழப்பு தடுக்கப்படுவதுடன்,  உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது.

கோலின் என்னும் நோய் எதிர்ப்பு தன்மையை அதிகளவு தன்னுள் கொண்டுள்ள காலிஃப்ளவரில் வைட்டமின் பி6, கே, சி, ஆன்டிஆக்ஸிடண்ட்,  மற்றும் ஃபோலேட் ஆகிய சத்துக்கள் நிறைந்ததுள்ளது.  கோடை காலங்களில் இதை உணவில் சேர்த்துகொள்வது கோடை கால நோய்களிலிருந்து உடலை காக்க உதவும்.

இளநீர்  அருந்துவதனால் வயிற்று பிரச்னை, நீரிழிவு நோய், இரத்த அழுத்தம், உடல் வறட்சி, உடல் கொழுப்பு அதிகரித்தல் போன்ற பிரச்னைகளை சரி செய்ய முடியும்.

குடைமிளகாய் அதிகப்படியான சத்துக்களை தன்னுள்கொண்டுள்ளது.குறிப்பாக  வைட்டமின் சி, கெரோடினாய்டுஸ்,  நார்ச்சத்து ஆகியவற்றை கொண்டுள்ளது. இதை உணவில் சேர்த்துக்கொள்வதனால் உடல் எடை கட்டுக்குள் இருப்பதுடன் . உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது.

Sharing is caring!