கோதுமை மாவில் இருந்த ரகசியம்.. புரியாமல் புலம்பிய மக்கள்…

ஷீரடி கிராமத்தின் சுற்று வட்டாரம் முழுக்க ஒரு நாள்  திடீரென்று காலரா நோய் பரவத் தொடங்கியது.  அது எந்நேரத்திலும் ஷீரடிக்குள் வரலாம்.  இங்குள்ள மக்களை நோய்க்கு அவதிக்குள்ளாக்கலாம். அவ்வூர் மக்களை இது அச்சமடையச் செய்தது

ஆனால் ,சாய்பாபாவோ இதனைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், தன் மசூதியில் இருந்த திருகையில் கோதுமை மாவை அரைத்துக் கொண்டிருந்தார். அவருக்கோ, அவரது நெருங்கிய பக்தர்களுக்கோ கூட இவ்வளவு கோதுமை மாவு தேவைப்படாது. ஆனால், அரைத்துக் கொண்டே இருந்தார் சாய்பாபா. அங்குள்ள மக்களுக்கு சாய்பாபா ஏன்  ஏவ்வளவு கோதுமை மாவை அரைக்கிறார்  என்று புரியாமல், குழப்பத்துடன் இருந்தார்கள் . இதனைப் பார்த்த பெண்கள் சிலர் சாய்பாபாவிற்கு உதவி செய்யும் விதமாக அவர்களும் வந்து திருகையில் கோதுமை மாவை அரைக்கத் தொடங்கினர். கோதுமை மாவு ஏராளமான அரைக்கப்பட்டு விட்டது . இவ்வளவு மாவு சாய்பாபாவிற்கு எதற்கு என்று அந்தப் பெண்களின் மனதில் தவறான ஆசையை உருவாக்கியது. சாய்பாபா அறியாமல் அந்த மாவை மூட்டை கட்டிக் கொண்டு தங்கள் வீட்டை நோக்கி நகரத் தொடங்கினர்.

இதனை எப்படி சாய்பாபா அறியாமல் இருந்துவிடுவார். கோபமாக அவர்களை நோக்கி வந்தார். ” பெண்களே என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் ? இந்த மாவை எல்லாம் உங்கள் வீட்டிற்குக் கொண்டு செல்லவதற்கு உங்களுக்கு உரிமை அளித்தது யார்? இந்த மாவை என்னவென்று நினைத்துக் கொண்டீர்கள் ? அத்தனை மூட்டை மாவையும் கொண்டுபோய் ஊர் எல்லையைக் சுற்றி சிறிதளவு கூட இடைவெளி இல்லாமல் கொட்டுங்கள்”  இது என் உத்தரவு என்றார் சாய்பாபா கடுமையாக.

இதனால், அரண்டுபோன அந்தப் பெண்களும் சாய்பாபாவின் பேச்சை மீற முடியாமல், மூட்டைகளைக் கொண்டு சென்று ஊர் எல்லை முழுவதும் ஒரு இடம் பாக்கி  இல்லாமல் கொட்டினார்கள் . ஆனால், சாய்பாபா ஏன் இந்தக் கோதுமை மாவை இப்படி வீணாகக் கொட்டச் சொல்கிறார் என்று யாருக்குமே புரியவில்லை. எனினும் பக்கத்து ஊர்களில் பரவிய காலரா நோய் ஷீரடிக்குள் மட்டும் நுழைவே இல்லை. கோதுமை மாவின் ரகசியம் இப்போது தான் அந்த ஊர் மக்களுக்குப் புரிந்தது.

                               ஓம்ஸ்ரீசாய்ராம்!!!!

Sharing is caring!