கோபத்தின் உச்சத்தில் இருக்கும் சிம்ம ராசி பெண்களை திருமணம் செய்ய போறீங்களா?

முன்னெடுத்து சென்று ஆட்சி புரிவதற்கென்றே பிறந்த சிம்ம ராசி மன்னர்களே.. இவர்களின் நம்பிக்கை, ஆதிக்கம் செலுத்தும் யுக்தி, படைப்பாற்றல் இவற்றிற்கு முன் எவ்வளவு தடைகள் வந்தாலும் தகர்த்தெறிந்து வெற்றியை காணும் நபர்கள் இவர்கள்.

இவர்களின் விசுவாச தன்மையும் தாராள மனமுமே போதும் நண்பர்களின் இதயத்தை வெற்றி காண.

இவர்களின் கம்பீரமான தோற்றத்தின் மூலமும் கவர்ந்திழுக்கும் பேச்சின் மூலமும் மற்றவர்களை எளிதாக தன் வசப்படுத்தி விடுவார்கள். எப்பொழுதும் உங்கள் அகம்பாவத்திற்கு தீணி போட்டு வளர்ப்பவர்கள் நீங்கள்.

ஒவ்வொரு நபருக்கும் ஒருவிதமான குணாதிசயம் இருப்பது இயல்பு. ஆனால், ஒருசில விஷயங்கள் அவரவர் இராசிக்கு ஏற்பது பொதுவான செயல்பாடுகள் இருக்கும்.

இது ஒருசிலர் மத்தியில் வேறுப்படலாமே தவிர பெரும்பாலும் இந்த ஒருமித்த செயல்பாடுகள் இருக்கத் தான் செய்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

நம்பிக்கையும், நேர்மையும் தான் சிம்ம ராசி பெண்கள் எதிர்ப்பார்க்கும் பண்புகள். இந்த இரண்டு பண்புகள் உங்களிடம் இருந்தால் மட்டுமே போதும், சிம்ம ராசி பெண்கள் உங்களை காதலிக்க துவங்கிவிடுவார்கள்.

சிம்ம ராசி பெண்கள் தங்கள் காதல் துணை தான் உலகம் என எண்ணி வாழ்பவர்கள். அந்த வகையில் சிம்ம இராசி பெண்களுக்கு என்று ஒருமித்த சில பொதுவான குணாதிசயங்கள் இருக்கின்றன.

இவை காதலில் எப்படி இருக்கிறது. இதனால், இவர்களை காதலிக்கும் ஆண்களுக்கு என்ன நன்மை என்பவை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

அதிகமான காதல்

சிம்ம ராசி பெண்கள் மிகவும் அதிகமாக காதலிப்பார்கள். காதலன் அதிகம் காதலிப்பதாக கூறிகொண்டிருந்தாலும் நீங்கள் ஒரு மடங்கு எதிர்பார்த்தால், அவர்களிடம் இருந்து ஆயிரம் மடங்கு காதல் எதிரொலிக்கும்.

இது அவர்கள் உங்களுக்காக கொடுக்கும் பரிசுகளில் இருந்து, தினமும் போடும் சண்டைகளில் கூட வெளிப்படும். காதலிப்பது இவர்களுக்கு மிகவும் பிடித்த ஒன்று.

உங்களது மகிழ்ச்சிக்காக என்ன வேண்டுமானாலும் இவர்கள் செய்வார்கள். உங்கள் மகிழ்ச்சியே தங்களது மகிழ்ச்சியாக கருதும் குணம் கொண்டவர்கள் சிம்ம ராசி பெண்கள். உங்களை தூக்கும் அளவு வலிமையும் காணப்படும்.

அறிவுக்களஞ்சியம்

சிம்ம இராசி பெண்களிடம் பொதுவாகவே அறிவுக் கூர்மை அதிகம். மற்றும் படைப்பாற்றல், நகைச்சுவை ஆற்றல் கொண்டவர்களாக இவர்கள் திகழ்வார்கள். இவர்கள் எங்கிருந்தலும் உங்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வார்கள்.

அழகு தேவதைகள்

உடை உடுத்துவதில் இருந்து, தாங்கள் செய்யும் சிறு, சிறு விஷயங்களிலும் அழகாக ஈடுபடுபவர்கள். இதுவே அவர்களை தேவதை போன்று காண்பிக்கும். சிம்ம ராசி பெண்கள் எப்போதும் புதுமையை எதிர்ப்பார்ப்பார்கள்.

கனவு வாழ்க்கை மெய்ப்படும்

நாம் புத்தகங்கள் மற்றும் படங்களில் பார்த்த அந்த கனவு வாழ்க்கையை இவர்கள் மெய்ப்பிப்பார்கள். இதுப் போன்ற காதல் அமைவது எல்லாம் மிகவும் கடினமாகும்.

ஒரே மாதிரி இருக்காது

சிம்ம இராசி பெண்கள் ஒரே மாதிரியான சுழற்சியான வாழ்க்கையை விரும்ப மாட்டார்கள். தினம், தினம், தினம் தீபாவளி போல, இவர்கள் புதியதாய் வாழ விரும்புவர்கள்.

தாம்பத்தியம்

தாம்பத்தியத்திலும், ஆண்களுக்கு நிகராக ஈடுபடும் திறன் கொண்டவர்கள் சிம்ம இராசி பெண்கள். எனவே, சிம்ம ராசி பெண்களை காதலிக்கும் ஆண்களுக்கு நினைக்கும் போதெல்லாம் சிவராத்திரி தான்.

திடீர் சுவாரஸ்யங்கள்

திடீர், திடீரென உங்களை ஆச்சரியப்படுத்த சிம்ம இராசி பெண்கள் தவறவே மாட்டார்கள். அது பரிசாக மட்டுமல்லாமல், முத்தங்கள், கட்டிப்பிடி வைத்தியங்கள் மற்றும் நீங்கள் என்றோ எதிர்பார்த்த விஷயங்கள் என எதுவாக கூட இருக்கலாம்.

திட்டமிட்ட வாழ்க்கை

சிம்ம இராசி பெண்கள் தங்களுக்கு என்ன வேண்டும், தங்கள் வாழ்க்கையை எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற திட்டமிடல்கள் இருக்கும். எனவே, இவர்கள் குழம்பவும் மாட்டார்கள், உங்களை குழப்பவும் மாட்டார்கள்.

அவநம்பிக்கை

இவர்களுக்கு அவநம்பிக்கை மிகவும் குறைவாக தான் இருக்கும். மற்றும் யாரையும் சந்தேகப்படமாட்டார்கள். ஆதலால், சிம்ம இராசி பெண்களை காதல் செய்வீர், மகிழ்ச்சியாக இருப்பீர்.

Sharing is caring!