கோமாவில் இருப்பவரையே பிழைக்க வைக்கும் ஆயுர்வேதம்

ஆயுர்வேதத்தில் நாள்பட்ட நோய்களுக்கு தீர்வு உண்டா என்பது பலருக்கும் அறியாத தகவலாகவே உள்ளது.

இப்படி நிரந்தர நோயால் பாதிக்கப்படுபவர்களுக்கு ஆயுர்வேத மருத்துவ சிகிச்சைகள் இருக்கத்தான் செய்கின்றனர். படுத்த படுக்கையில் கிடப்பவர்கள் கூட எழுந்திருக்கும் அளவிற்கு ஆயுர்வேத மருத்துவமும் கண்டுபிடிப்புகளும் வளர்ந்துள்ளன. ஆனால் மக்களுக்கு இதைப் பற்றிய விழிப்புணர்வு தான் இருப்பதில்லை.

அந்த வகையில் பார்க்கும் போது 61 வயது பெண், கோமாவில் படுத்த படுக்கையாக இருந்த ஒருவர் ஆயுர்வேத முறைப்படி சிகச்சை பெற்று பலனடைந்துள்ளார். அவருக்கு கொடுக்கப்பட்ட ஆயுர்வேத சிகிச்சை முறைகளைப் பற்றி தான் இக்கட்டுரையில் நாம் காண போகிறோம்.

பஞ்சகர்மா

பஞ்சகர்மா என்ற ஆயுர்வேத சிகிச்சை முறையில் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி உடலை சுத்தம் செய்யப்படுகிறது. இதற்காக நிறைய ஆயுர்வேத மூலிகை மருந்துகளை பயன்படுத்துகின்றனர்.

  • உடல் சுத்திகரிப்பு – சோதனா சிகச்சை
  • ஊட்டமளிக்கும் சிகிச்சை – ப்ரிமானா
  • குடும்ப உடல் நல பராமரிப்பு – சமனா
  • சிரோதரா-இன்ஸோமினியா(தூக்க பிரச்சினை)
  • நாசியா- மூளைக்கு மருந்து செலுத்துதல்
கோமா நிலை

மருத்துவ விளக்கம் படி பார்த்தால் 6 மணி நேரத்துக்கு மேலாக மூளை இறப்பு நிலை என்று கூறப்படுகிறது. இந்த கோமா நிலை நோயாளிகளால் எதையும் பார்க்கவோ, கேட்கவோ, உணரவோ முடியாது. இது ஒரு சாதாரண தூக்க நிலை கிடையாது. வருடம் வருடமாக தூங்கும் நிலை. கோமாவில் இருப்பவர்களால் எந்த செயலும் செய்ய இயலாது. பொதுவாக கோமா நிலை ஏற்பட முக்கிய காரணம் போதிய ஆக்ஸிஜன் இல்லாமல் இதயம் செயலிழப்பு ஏற்படுவது தான்.

ஆயுர்வேத விளக்கம்

இந்த கோமா நிலையை ஆயுர்வேத மருத்துவத்தில் சன்னியாஸா என்கிறார்கள். நமது உடலில் உள்ள மூன்று தோஷங்களில் பாதிப்பு ஏற்பட்டு நம் மனம், உடல் மற்றும் பேச்சு பாதிப்படைகிறது. இந்த தோஷ பாதிப்பு நமது இதயத்தை பாதித்து மூளை செயலிழப்பை ஏற்படுத்தி விடுகிறது.

இந்த கோமாவிற்கு சரியான சிகிச்சை மற்றும் மருந்துகள் கொடுத்து வந்தால் இதிலிருந்து மீள முடியும். புகை, பொடிகள், நாசி வழி மருந்து மூலம் ஆயுர்வேத முறையில் இதற்கு சிகச்சைகள் வழங்கப்படுகிறது.

நாசியா ஆயுர்வேத முறை

நமது மூக்கு என்பது உணர்வுகளுக்கான கதவு என்று ஆயுர்வேதம் கூறுகிறது. இந்த மூக்கின் வழியாக மருந்து செலுத்தும் போது மனம், கபம், பிராணா வாதம், சதக்கா பித்தம் மற்றும் மஜ்ஜா தாது ஆகியவற்றின் பாதிப்பை சரி செய்கிறது. அதன் படி நாசியா என்பது நமது மூக்கு தூவரத்தின் வழியாக மருந்து செலுத்தப்படுகிறது.

இதன் படி சுவாசப் பாதை சுத்தமடைகிறது. இது நிணநீர் அமைப்பை நோயெதிர்ப்பு சக்தியுடன் வைத்து குழந்தைகள், பெரியவர்களுக்கு சுவாச தொற்று ஏற்படாமல் தடுக்கிறது.

Sharing is caring!