கோவில்களில் எப்படி வழிபட வேண்டும்?

கோவில்களுக்கு நாம் செல்கிறோம். ஆனால், எப்படி வழிபடுவது என, பலருக்கு தெரிவதில்லை, அதிலும், ஒவ்வொரு கடவுளுக்கும் இத்தனை சுற்றுகள்தான் வலம் வரவேண்டும் என்று கூறப்படுகிறது.

விநாயகருக்கு 1 அல்லது 3 முறை, சூரியனுக்கு  2  முறை, சிவபெருமானுக்கு 3, 5, 7 முறை , முருகனுக்கு 6 முறை,  தட்சிணா மூர்த்திக்கு 3 முறை, சோமாஸ் சுந்தருக்கு  3 முறை, அம்பாள் 4, 6, 8  முறை  , விஷ்ணு 4 முறை, மஹா லட்சுமி 4 முறை, அரசமரம் 7 முறை, அனுமார் 11 அல்லது 16 முறை, நவக்கிரகத்துக்கு 3 அல்லது 9  முறையும் வலம் வர வேண்டும். .

மூலவர் மற்றும் அம்மன் போன்ற திருவுருவங்களுக்கு அபிஷேகம் செய்யும்போது, வலம் வரக்கூடாது.
பிரம்மா, விஷ்ணு, சிவன் இம்மூவரை வணங்கும் போது, சிரசின் மேல் 12 அங்குலம் உயர்த்தி கைகூப்பி வணங்க வேண்டும். ஆண்கள் தலைக்கு மேல் கைகூப்பி  வணங்கலாம்.பெண்கள் எப்போதும் போல் கைகூப்பி வணங்கினால் போதும்.

கொடி மரம், நந்தி, கோபுரம் இவற்றின் நிழலை மிதிக்கக்கூடாது.
விளக்கில்லாதபோது இருட்டில் வணங்கக்கூடாது. தகாத வார்த்தை மற்றும் எதிர்மறை  சொற்களை பேசக்கூடாது. கோவிலுக்குள் தூங்கிவிடக்கூடாது.

கோவிலுக்குச் சென்று வீடு திரும்பியதும், கால்களைக் கழுவக்கூடாது. சில நிமிடங்கள் அமர்ந்து விட்டுதான் கால் கழுவ வேண்டும்.
பகலிலும், இரவிலும், சாப்பிடுவதற்கு முன் கோவிலுக்கு செல்வது சிறப்பு.

Sharing is caring!