கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என நம் முன்னோர் கூறியது ஏன்?

மன்னராட்சி காலத்தில், கோவில் கோபுரத்தை விட, உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என கட்டுப்பாடுகள் இருந்தது. நம் முன்னோர்களுக்கு இருந்த அறிவியல்  ஞானம் தான் இதற்கு காரணம்.  கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி, செப்பு அல்லது ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும். இக்கலசங்களிலும் அதில் கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின்காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியினை, கலசங்களுக்கு கொடுக்கின்றன.

நெல், கம்பு, கேழ்வரகு, திணை, வரகு, சோளம், மக்காசோளம், சாமை, எள் ஆகியவை கோபுர கலத்தில் இருக்கும். குறிப்பாக வரகு தானியம் அதிகமாக  இருக்கும்.  “வரகு” மின்னலை தாங்கும் அதீத ஆற்றலை பெற்றது. அதனால் தான அதை அதிகமாக வைக்க சொல்லியுள்ளனர். இந்த நுட்பம்  மிகவும் சரியான விசயம் என, வானிலை விஞ்ஞானிகள் இப்போது ஏற்றுக் கொண்டுள்ளனர்.

இந்த தானியங்களின் திறன் 12 வருடங்கள் வரை தாக்கு பிடிக்கக்கூடியது அதற்கு பிறகு தானியங்கள் தன் சக்தியை இழந்துவிடும் என்பதால் பனிரெண்டு  வருடங்களுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்த சொல்லியுள்ளனர். அப்போது, கலசங்களில் இருக்கும் பழைய தானியங்கள் நீக்கப்பட்டு புதிய தானியங்கள் நிரப்பபடும்.

உயரமான பொருட்கள் மின்னலால் முதலில் தாக்கப்பட்டு,உயரம் கம்மியான பொருட்கள் இரண்டாவதாக தாக்கப்படுகின்றது. மரங்களின் கீழ் உயிர்கள் நிற்கும்பொழுது மின்னலின் ஒருபாதி மரத்தை கொல்லும் ,மறு பாதி கீழ் நிற்கும் உயிர்களை கொல்லும்.

அதனால், மிக உயரமான இடத்தில் அமைந்த இடி தாங்கிதான், முதலில் ‘எர்த்’ ஆகும். மேலும் அது
எத்தனை பேரைக் காப்பாற்றும் என்பது, அதன் உயரத்தைப் பொறுத்தது. அடிப்படையில்
கலசங்கள் இடிதாங்கிகள்.

கோபுரத்தின் உயரம் ஐம்பது மீட்டர்என்றால், நூறு மீட்டர் விட்டம் வரைக்கும் எத்தனை பேர் இருந்தாலும், அவர்கள், மின்னல் தாக்காமல் காக்கப்படுவார்கள்.
‘கோவில் இல்லாத ஊரில் குடியிருக்கவேண்டாம்’ என, நம் முன்னோர் கூறியது இதற்காக தான்.

Sharing is caring!