சகல தோஷங்களையும் போக்கும் பிரதோஷ வழிபாடு..!

பிரதோஷம்’ என்ற சொல்லில் ‘தோஷம்’ என்று வருகிறது. சகல தோஷங்களும் போய் சந்தோஷம் குடிகொள்ள பிரதோஷ நேரத்தில் வழிபாடு செய்யவேண்டும்.பிரதோஷ நேரத்தில் சிவபெருமானையும், உமா தேவியையும், நந்தீஸ்வரரையும் வழிபடுவது நல்லது.

உலகம் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கிய நேரம் பிரதோஷ நேரமாகும். அதாவது ஆலகால விஷத்தை சிவன் உண்டு, நீலகண்டனாகி உலகத்தைக் காப்பாற்றிய நேரம். அன்றைய தினம் விரதம் இருந்து சிவனை பூஜிப்பதோடு, நந்திக்கொம்பு வழியே நாயகனைப் பார்த்து, நந்தியையும் வழிபட்டால் சிந்தித்த காரியங்கள் அனைத்தும் ஜெயமாகும். ஒளி தீபம் ஏற்றினால் ஒளிமயமான எதிர்காலம் வந்து சேரும். அர்ச்சனைகள் செய்தால் பிரச்சினைகள் தீரும். அபிஷேகம் பார்த்தால் அனைத்துப் பலன்களும் கிடைக்கும். பிரதோஷ நேரத்தில் சிவனுக்கும், நந்திக்கும் குறுக்கே போகக்கூடாது.

Sharing is caring!