சந்திராஷ்டம் சங்கடம் தருமா?

சந்திரபகவான்  மாதந்தோறும்  ஒருவரது ஜென்மராசிக்கு எட்டாமிடத்தில் சஞ் சரிக்கும் காலமே சந்திராஷ்டமம் என்று அழைக்கப்படுகிறது. அஷ்டமென்றால் எட்டு என்று பொருள்படும். சந்திரனும் எட்டாம் இடமும் இணையும் நாள்  சந்திராஷ்டமம்  என்று அழைக்கப்படுகிறது. இரண்டறை நாள் சந்திரன் நீடிக்கும் இக்காலம் என்னென்ன துன்பங்களை ஏற்படுத்துமோ என்றுதான்  பெரும்பா லோனோரது அச்சமாக இருக்கிறது.ஒரு ராசிக்கு இரண்டேகால் நாள் வீதம் 12 ராசியினரையும் 28 நாட்களிலேயே கடந்துவிடுகிறான். காலண்டரில்  சந்திரா ஷ்டம காலத்தில்  தமது ராசிகளை பார்த்து நாட்களை யுகங்களாக  நினைப் பவர்கள் நம்மிடையே இருக்கிறார்கள்.

தமது ராசியில் சந்திரன் வசிக்கும் இக்காலத்தை  எத்தகைய புதிய முயற்சியும் இன்றி கடந்துவிடுவது முக்கியம் என்று  ஜோதிடர்கள் கூறுகிறார்கள். அப்படி மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றிகளை தராது. தடைகளை உண்டாக்கும் என்றும் சொல்கிறார்கள். திருமண நாளை தேர்வு செய்யும் போது மணமக்கள் இருவருக்கும் சந்திராஷ்டம் இல்லாத நாளாக தேர்வு செய்வார்கள். புதுமனை புகுவிழா போன்ற சுபக்காரியங்களை உங்கள் ராசிக்குரிய சந்திராஷ்டம தினத்தில் தவிர்க்க சொல்வதற்கு காரணமும் இதுதான்.

சந்திரன் மனோகாரகன். மனதினை வழிநடத்துவதில் முக்கிய பங்கு வகிப்பதால் இப்பெயர் பெற்றான். உடலை குறிப்பவன்.  மனதை ஆள்பவன். அதனால் தான் மனம் சார்ந்த  உளவியல் நிகழ்வுகளுக்கு சந்திர பகவானே காரணமமாகிறான்.  மனம் தெளிவாக இருக்கும் போது  மேற்கொள்ளப்படும்  முயற்சிகள்  சிறப்பான எதிர்காலத்தை உருவாக்கி தரும். அத்தகைய தெளிவான மனம் குழம்பும் நேரத்தில் எத்தகைய செயலிலும் ஈடுபடக்கூடாது என்பதற்காகத்தான் சந்திராஷ் டமத்தில் புதிய முயற்சிகள் மேற்கொள்ளக்கூடாது என்பதோடு அன்றாட பணிகளிலும் கூடுதல் கவனத்தை  வைக்க வேண்டியதாக இருக்கிறது. அன் றைய தினத்தில்   வீண் விவாதங்களிலும், அநாவசியமாக அடுத்தவரது நலனி லும் ஈடுபட்டால் விபரீதங்கள் அதிகரிக்கும் என்றும் சொல்வதுண்டு.

தவிர்க்க முடியாத காரணங்களால் உங்கள் ராசிக்கு சந்திராஷ்டம் வரும் தினத் தன்று முக்கிய பணிகளை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டால் அம்பிகைக்கு பாலாபிஷேம் செய்த பிறகு,  விநாயகருக்கு அருகம்புல்  மாலை சாற்றி வழி பட்டு பிறகு பணியை தொடங்கலாம்.

சந்திராஷ்டமம் என்றாலே தீமைதான் விளைவிக்கும் என்பது பொதுவான பலன்களே. ஒருவரது ஜெனன  ஜாதகத்தில் சந்திரன் 6,8,12 ஆகிய இடங்களில் மறைந்தால் அவர்களுக்கு சந்திராஷ்ட தினம் வரும்போது யோகத்தையே கொடுக்கும் என்பதையும் மறக்க வேண்டாம்.

சந்திராஷ்டமம் மனதுக்கு குழப்பத்தை உண்டாக்கும் நாள் என்பதால் எதையும் ஆழ யோசித்து செய்வதே நல்லது.  கூடுதல் கவனம் இருந்தால் சந்திராஷ் டமத்தை சங்கடமின்றி கடக்கலாம்.

Sharing is caring!