சந்திர கிரகணம் …பரிகாரம் செய்ய வேண்டிய ராசிக்காரர் யார்?

இந்த ஆண்டின் மிகப்பெரிய சந்திர கிரகணம் வரும் ஜூலை 27ஆம் தேதி வெள்ளிக்கிழமை உத்திராடம், திருவோணம் நட்சத்திரங்களில் அமைந்துள்ளது . இந்த சந்திரகிரகணம் வரும் நாள்  ஆடி பௌர்ணமியாக அமைந்து விட்டது மேலும் சிறப்பு. அன்றைய தினத்தில் நிலவை சுற்றி சிகப்பு நிற வளையம் தோன்றும் என்பதால் ரெட் மூன் என அழைக்கப்படுகிறது. கேது சந்திர கிரகணம் சந்திரன் பூமியின் பின்னால் கடந்து செல்லும் போது, சூரியனின் கதிர்களை நிலவின் மீது படுவதிலிருந்து பூமி மறைத்துவிடுவதால் சந்திர கிரகணம் ஏற்படுகிறது.

சூரியன், பூமி, நிலவு ஆகியவை மிகத் துல்லியமாகவோ அல்லது ஏறத்தாழவோ,ஒரே வரிசையில் வரும்போது மட்டுமே சந்திர கிரகணம் ஏற்படும். இது கேது உடன் சந்திரன் இணைந்திருக்கும் போது நிகழ்கிறது. இந்தியாவில் தெரியும் சந்திர கிரகணம் ஆரம்ப காலம் இரவு 11.54 மணி சந்திர கிரகணம் மத்திம காலம் அதிகாலை 01.52 மணி. சந்திர கிரகணம் முடிவு காலம் அதிகாலை 3.49 மணி. இந்த நூற்றாண்டின் மிக நீளமான இந்த சந்திர கிரகணத்தை இந்தியாவின் அனைத்து பகுதிகளில் உள்ளவர்களும் கண்டு ரசிக்கலாம்.

சந்திரகிரகணத்தின்போது, கர்ப்பிணிகள் எந்தவிதமான  வேலைகளை  செய்யக் கூடாது என்பது நம் முன்னோர் காலம் தொட்டு இருந்து வரும் பழக்கம்.

கர்ப்பிணிகள், சூரிய கிரகணமோ, சந்திர கிரகணமோ எதுவாக இருந்தாலும் அப்போது வெளிப்படும் கதிர்வீச்சுகள் அவர்களைப் பாதித்துவிடக் கூடாது என்பதே இந்த பழக்கத்தின் அடிப்படை காரணம் .கிரகண நேரத்தின் போது வெளியே சென்றால் கதிர்வீச்சுக்களினால் கர்ப்பிணிகளுக்கும் வயிற்றில் உள்ள குழந்தைக்கும் பாதிப்புகள ஏற்படும். இதனால் பிறக்கும் குழந்தைகளுக்கு சில ஊனங்கள் ஏற்பட வாய்ப்புண்டு.

பொதுவாக சந்திர கிரகணம்  தொடங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே சாப்பிட்டுவிட வேண்டும். சமைத்து வைத்த உணவுகளில் தர்ப்பை புல்லினை போட்டு வைக்க வேண்டும். கிரகணத்தின் போது நவகிரக துதியை பாராயணம் செய்யலாம். அதுபோலவே சந்திர கிரகணத்திற்கான துதியையும் பாராயணம் செய்யலாம். கிரகணம் முழுவதும் முடிந்த பிறகு குளித்து ஆலய தரிசனம் செய்து தீபம் ஏற்றி வழிபட கடன் தொல்லைகளில் இருந்து விடுபடலாம். ஆலய தரிசனம் மேற்கொண்ட பிறகே சாப்பிட வேண்டும்.

சந்திர கிரஹணத்தை முடிந்தவுடன் கிருத்திகை, பூரம், உத்திரம், பூராடம், திருவோணம் நக்ஷத்திரத்தினர் தோஷ பரிகாரம் செய்து கொள்வது அவசியம்.

மேற்கண்ட நட்சத்திரக்காரர்கள் சந்திர கிரகணத்தின் போது  ‘ௐம் நமோ நாராயணாய நமஹ ‘ எனும் மந்திரத்தை ஜெபித்து வருவதோ அல்லது மிருத்தியுஞ்சய மந்திரம், விஷ்ணு சஹஸ்ரநாமம், அல்லது ராம நாமம் ஜெபித்து வரின், மிகப்பெரிய பலன் கிட்டும்.

மேலும் மறுநாள் (28.07.2018) காலை ஒரு வெள்ளை ரவிக்கை துணி அல்லது அங்கவஸ்திரத்துடன், சிறிது நெல், அரிசி பாக்கெட்,மட்டை தேங்காய், வெற்றிலை பாக்கு, பழம்,பூவுடன் சிறிது தட்சிணையும் வைத்து எவருக்கேனும் தர நன்மைகள் பெருகும்.

ஓம் ஸ்ராம் ஸ்ரீம் ஸ்ரோம் சஹ் சந்த்ராய நமஹ என்ற மந்திரத்தை கிரகண நேரத்தில் முடிந்தவர்கள் 6000 முறை கூறுவது அளவற்ற நற்பயனை தரும்.

ஜூலை 27ஆம் தேதியன்று திருமலை-திருப்பதி தேவஸ்தானத்துக்குச் சொந்தமான ஏழுமலையான் கோவில், திருச்சானூர் பத்மாவதி அம்மன் கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் 12 மணி நேரம் தரிசனம் ரத்து செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!