சனிக்கிழமை பெருமாளுக்கு விரதம் இருப்பது எப்படி?

சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்த நாள் என்பதால் அன்றைய தினம் விரதம் இருந்து பெருமாளை வழிப்படுகிறோம்.

நவக்கிரகங்களில் ஆயுள்காரகன் சனி பகவான்.  சனி கிரகத்தையும் கட்டுப்படுத்துபவர் தான் பெருமாள்.  எல்லோருமே முதலில் வேண்டுவது ஆரோக்கியம், ஆயுள், செல்வம்.. இவை மூன்றுமே நமக்கு கிடைப்பதற்கு அருள் செய்வது பெருமாள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

பெருமாளின் அனுக்கிரகம் கிடைக்க சனிக்கிழமை விரதமே உகந்தது. எப்போதும் பெருமாளுக்கான விரதமும், வழிபாட்டு முறைகளும் மிக எளிமையானது. சனிக்கிழமை காலை வேளையில் நீராடி, வீட்டில் விளக்கேறி, பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபாட்டை ஆரம்பிக்க வேண்டும். வேண்டுதல்களை நிறைவேற்றித் தரச்சொல்லி சங்கல்பம் செய்து பூஜையை துவங்க வேண்டும்.  பகலில் சுவாமிக்கு படைத்த துளசி சேர்த்த நீர், பானகம், பழங்கள், பால் அருந்தலாம். இயலாதவர்கள் எளிய காலை ஆகாரத்தை எடுத்துக்கொள்ளலாம். மாலை அருகில் உள்ள பெருமாள் ஆலயம் சென்று துளசி மாலை சார்த்தி வழிபாடு செய்தால் வேண்டுதல் நிறைவேறும். இரவு எளிய உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்.

ஒவ்வொரு சனிக்கிழமையும் இந்த விரதத்தை கடைபிடிக்க ஆரோக்கியம், ஆயுள், செல்வம் பெருகி நாம் மகிழ்ச்சியான வாழ்வை பெறலாம்.

Sharing is caring!