சனிபகவானை மகிழ்விக்க என்ன செய்யலாம்

கோபத்தில் இருப்பவர்களிடம் இறங்கி போனால் அவர்களது கருணை மிக்க பார்வை நம் மீது திரும்பும் என்பது இயற்கை. இது மனிதர்களை விட இறைவனுக்கு நன்றாகவே பொருந்தும்.

நமது கர்மாவால் முந்தைய பிறவி கடனைத் தீர்க்கவே மீண்டும் மனிதனாக பிறப்பெடுத்திருக்கிறோம். இப்பிறவி யிலும் அதற்கேற்ப பலன்களை அனுபவிக்கிறோம். அப்படி இருக்கும் போது கெடுதல் தரக்கூடிய பலன்களை பெறும் நேரங்களில் நமக்கு கைகொடுப்பது இறைவனே.

இறைவனே நமக்கான சோதனைகளை கொடுக்கும் போது அதிலிருந்து மீள்வதற்கு மீண்டும் அவனிடமே சரணடைவது தான் நமது மீட்சிக்கான வழி. ஜாதகங்களை ஆராய்ந்து பார்க்கும் போது நவக்கிரகங்களை வழி படுவதன் மூலம் நம் வாழ் வில் உண்டாகும் சோதனைக்காலங்களை பக்குவமாக கழிந்து விடலாம் என்கிறார்கள்.

நவக்கிரகங்களில் ஜாதகரின் கட்டத்தில் யாருடைய பார்வை கெடுதல் தரும் வகையில் அமைந்திருக்கிறதோ அவர் அந்த நவக்கிரகத்துக்குரிய பரிகாரங்களைச் செய்வதே இயல்பு. நவக்கிரகங்களில் ராகு, கேது ஆதிக்கத் தை விட சனி பகவானின் பார்வை படும்போதுதான் மிகுந்த சிக்கலுக்கு ஆளாகிறோம்.

கிரகங்களில் வலிமையானவர் சனிபகவான், இவர் யமதர்ம மகாராஜாவின் சகோதரரும் கூட. பாரபட்சமின்றி நடந்து கொள்ள வேண்டும் என்று கட்டளையிட்ட சர்வேஸ்வரனையும் விட்டுவைக்காததாலேயே இவர் எம்பெரு மானாகிய சிவ பெருமானால் ஈஸ்வரர் என்னும்பட்டத்தைத் தாங்கி சனீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். பூலோகத்தில் மட்டுமல்ல மூவுலகிலும் இவரைக் கண்டு அச்சம் கொள்கிறார்கள்.

ஜோதிட சாஸ்திரத்தில் இவருக்கு மந்தன் என்ற பெயரும் உண்டு. நவக்கிரகங் களில் மெதுவாக நகரும் சனிபகவான் 12 ராசிகளில் ஒவ்வொரு ராசியிலும்  இரண்டரை ஆண்டுகள் தங்குகிறார். ஜாதகத்தில் நடக்கும் திசைக்கேற்ப பொங்குச்சனி, அஷ்டமச்சனி, ஏழரைச் சனி என ஒருவர் வாழ்வில் நடக்கும் சனி திசையில் கடுமையான சோதனைக்கட்டங்களை உண் டாக்கினாலும் உரிய முறையில் அவனை வழிபட்டால் மகிழ்ந்து தீங்கை குறைத்து நன்மையை உண்டாக்குவார். அதனால் தான் ஆலய வழிபாடுகளில் நவக்கிரக வழிபாடும் அவசியம் என்பதை முன்னோர்கள் உணர்த்தும் வகையில் செயல்பட்டா ர்கள்.

Sharing is caring!