சனியையே ஆட்டிப்படைத்த ஆஞ்சநேயர்….அவர் அருள் கிடைக்க….

புராணக் கதைகளின் படி, சனி பகவானுக்கு ஆஞ்சநேயர் என்றால் பயமாகும். அதனால் ஆஞ்சநேயர் மந்திரங்கள் படித்தால், சனியின் தாக்கங்கள் குறையும் என நம்பப்படுகிறது.

ஜாதகத்தில் திசை இருக்கும் நிலையால் அவதிப்படுபவர்கள் ஆஞ்சநேயர் மந்திரங்களை படிக்க வேண்டும். குறிப்பாக சனிக்கிழமைகளில் இதனால் அமைதியும் வளமும் பெருகும் என கூறப்பட்டுள்ளது.

இறைதன்மை கொண்டுள்ள யாரும் வயது வித்தியாசம் இல்லாமல் உச்சரிக்கலம். 1008 தடவை உச்சரித்தால் போதும், அதன் வரிகள் உங்கள் மனதில் பதிந்து விடும்.

ஆஞ்சநேயரை பற்றி உங்களுக்கு தெரியாத சில தகவல்களை பற்றி அறிந்து கொண்டு தொடர்ந்து மந்திரத்தை உச்சரிக்கவும்.

01- சனியின் தாக்கங்களை குறைக்க..

புராணக் கதைகளின் படி, சனி பகவானுக்கு ஆஞ்சநேயர் என்றால் பயமாகும். அதனால் ஆஞ்சநேயர் மந்திரங்கள் படித்தால், சனியின் தாக்கங்கள் சற்று குறையும் என நம்பப்படுகிறது.

ஜாதகத்தில் திசை இருக்கும் நிலையால் அவதிப்படுபவர்கள் ஆஞ்சநேயர் மந்திரங்களை படிக்க வேண்டும்; குறிப்பாக சனிக்கிழமைகளில். இதனால் அமைதியும் வளமும் பெருகும்.

இலங்கைக்கு பாலம் அமைக்கும் திருவேலையில் அனுமன் தீவிரமாக இருந்த போது வந்தார் சனி பகவான்.

“ஆஞ்சநேயா உன்னை இரண்டரை மணி நேரம் பிடிக்க வேண்டும். உன் உடலில் ஏதாவது ஒரு பகுதியை சொல் அங்கு இரண்டரை மணி நேரம் இருந்துவிட்டு போய்விடுகிறேன்” என்றார்.

“கடமையைச் செய்து கொண்டிருப்பவர்களை தொந்தரவு செய்தல் தவறு. அதனால், தலையில் உட்கார்ந்து கொள்” என்றார்.

சனி பகவானும் ஏறி அமர்ந்தார். கற்களையும் மலைகளையும் மாறி மாறி தலையில் ஏற்றினார் அனுமன். பாரம்தாங்காமல் சனிபகவான் அலறினார்.

“சொன்ன சொல் தவறக்கூடாது.இரண்டரை மணி நேரம் கழித்து தான் இறங்க வேண்டும்” என்றார் அனுமன். அதன் பிறகே இறக்கிவிட்டார்.

“ராம பக்தர்களையும் ஆஞ்சநேய பக்தர்களையும் இனி தொடுவதில்லை” என்று கூறிவிட்டு அகன்றார் சனீஸ்வரன்.

02- தீய சக்திகளை திசை திருப்ப..

ஆஞ்சநேயர் மந்திரங்களை 108 தடவை உச்சரித்து விட்டு எங்கு சென்றலும் அது நன்மையாக இருக்கும் நினைத்தது நடக்கும்.

ராமபிரானின் தீவிர பக்தனாக விளங்கிய பழம்பெரும் கவியான துளசிதாஸ் அவர்களால் இயற்றப்பட்டதே ஆஞ்சநேயர் மந்திரங்கள். இது 40 கவிதை செய்யுளை கொண்டுள்ளது.

அதனால் தான் ‘சாலிசா’ என ஹிந்தி மொழில் கூறுகிறார்கள். ஆஞ்சநேயர் மந்திரங்களில் சில வகையான இறைதன்மையுள்ள ரகசியங்கள் அடங்கியுள்ளதாக கருதப்படுகிறது.

இறைதன்மை கொண்டுள்ள இந்த 40 செய்யுள்களை, வயது வித்தியாசம் இல்லாமல் யார் வேண்டுமானாலும் ஓதலாம். சில முறைகள் ஓதினால் போதும், அதன் வரிகள் உங்கள் நினைவில் ஓதிந்து விடும்.

ஆஞ்சநேயர் மந்திரங்கள் பற்றி உங்களுக்கு தெரியாத சில தகவல்களை பற்றி அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். ஆஞ்சநேயர் மந்திரங்களுடன் தொடர்பில் உள்ள சில சுவாரசியமான விஷயங்களைப் பற்றியும் பார்க்கலாம்.

03- ஆஞ்சநேயர் மந்திரங்களுக்கு பின்னியில் உள்ள புராணக்கதை

ஒரு முறை அவுரங்கசீப்பை சந்திக்க துளசிதாஸ் சென்றிருந்தார். துளசிதாஸை பரியாசம் செய்த பேரரசர், கடவுளை தனக்கு காண்பிக்க சொல்லி சவால் விட்டார்.

உண்மையான பக்தி இல்லாமல் ராம பிரானை பார்ப்பது இயலாது என சாமார்த்தியமாக பதிலளித்தார் கவி. இதன் விளைவாக, அவுரங்கசீப்பால் சிறைப் பிடிக்கப்பட்டார் துளசிதாஸ்.

சிறையில் இருந்த காலத்தில் தான் ஆஞ்சநேயர் மந்திரங்கள் என்ற இந்த அற்புதமான செய்யுளை அவர் இயற்றினார் எனவும் கூறப்படுகின்றது.

04- எப்போது ஆஞ்சநேயர் மந்திரங்களை படிக்க வேண்டும்?

காலையில் குளித்த பிறகு மட்டுமே இந்த மந்திரங்களை படிக்க வேண்டும். சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு இதனை படிக்க வேண்டுமானால் உங்கள் கைகள், பாதங்கள் மற்றும் முகத்தை முதலில் கழுவ வேண்டும்.

ஆஞ்சநேயர் மந்திரங்களை ஓதும் போது, தீய சக்திகளில் இருந்து விடுபடுதல் உட்பட மிகப்பெரிய பிரச்சனைகள் வரை, ஆஞ்சநேயரின் ஆன்மீக பங்களிப்பு இருக்கும்.

ஆபத்தை விளைவிக்கும் தீய சக்திகளை நீக்கும் கடவுளாக கருதப்படுகிறார் ஆஞ்சநேயர். நீங்கள் தீய சக்திகளால் பிரச்சனைக்கு உள்ளாகியுள்ளீர்கள் என்றால் ஆஞ்சநேயர் மந்திரங்களை உங்கள் தலையணையின் கீழ் வைத்து படுங்கள்.

அது உங்களுக்கு அமைதியை ஏற்படுத்தும். கடினமான எண்ணங்களை போக்கவும் கூட இது உதவும்.

05- மன்னிப்பு கோரி வணங்குதல்

நாம் அனைவரும் தெரிந்தோ தெரியாமலோ பாவங்களை செய்கிறோம். ஹிந்து மத கொள்கைகளின் படி, நம் பாவங்களினால் தான் பிறப்பு-இறப்பு என்ற சுழற்சிக்குள் சிக்கி தவிக்கிறோம். ஆஞ்சநேயர் மந்திரங்களில் ஆரம்ப

செய்யுள்களை ஓதினால், சென்ற ஜென்மத்திலும் தற்போதைய ஜென்மத்திலும் செய்த பாவங்கள் நீங்கும்.

06 -தடைகளை அழிக்க

விநாயகரை போல் ஆஞ்சநேயரும் கூட நம் அனைத்து தடைகளையும் நீக்கும் வல்லமையை பெற்றவர்.

முழுமையான பக்தியோடு ஒருவர் ஆஞ்சநேயர் மந்திரங்களை படித்தால், ஆஞ்சநேயரின் இறைதன்மையுள்ள பாதுகாப்பு கிடைக்கும் என நம்பப்படுகிறது.

வாழ்க்கையில் அந்த பக்தர் எந்த ஒரு சிக்கல்களையும் சந்திக்க மாட்டார்.

07- மன அழுத்தத்தை போக்க

காலை எழுந்த முதல் காரியமாக ஆஞ்சநேயர் மந்திரங்களை படித்தால், அன்றைய நாள் சிறப்பாக செல்லும். நீங்கள் அமைதியாக இருக்க உதவும். அதே போல் வாழ்க்கையும் உங்கள் கட்டுப்பாட்டின் கீழ் அமையும். ஆஞ்சநேயர்

மந்திரங்களை ஜெபித்தால், ஒருவருக்கு ஆன்மீக ஆசீர்வாதம் கிடைக்கும்.

08- பாதுகாப்பான பயணத்திற்கு

சில கார்களில் முன்பக்க கண்ணாடியில் அல்லது டாஷ்போர்ட் மீது சிறிய ஆஞ்சநேயர் சிலையை கண்டிருப்பீர்கள்.

சரி அவரின் சிலையை எதற்கு வாகனங்களில் வைக்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா? விபத்துக்களை தவிர்த்து, வெற்றிகரமான பயணத்தை மேற்கொள்ள ஆஞ்சநேயர் உதவுகிறார் என நம்பப்படுகிறது.

09- எதிர்மறை ஆற்றல் திறன்களை நீக்கும்

ஆஞ்சநேயர் மந்திரங்களில் “பூத் பிசாஸ் நிகாத் நஹி ஆவேன், மகாவீர் ஜப் நாம் சுனாவே” என்று ஒரு செய்யுள் உள்ளது.

அதற்கு அர்த்தம் – ஆஞ்சநேயர் பெயரை சொல்லி, ஆஞ்சநேயர் மந்திரங்களை உரைக்க படிப்பவரை எந்த ஒரு தீய சக்தியும் தாக்காது. இது உங்கள் குடும்ப உறுப்பினர்களிடம் மனது மற்றும் ஆன்மாவில் நிலவும் அனைத்து வித

எதிர்மறை எண்ணங்களை போக்கி, அமைதியையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தும்.

மூலமந்திரத்தை இலட்சத்தெட்டு உரு ஜெபித்துக் கொண்டு வந்தால் அனுமன் அருள் கிடைக்கும்…

“ஓம் ஹ்ரீம் உத்தரமுகே, ஆதிவராஹாய, பஞ்சமுகி ஹனுமதே, லம் லம் லம் லம் கைல ஸம்பத் கராய ஸ்வாஹா”

Sharing is caring!