சனி, செவ்வாய் தோசங்களை போக்கும் முருகன்……?

சனி,செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கு  பரிகாரத்தலம் – கூந்தலூரு முருகன்…

திருநாவுக்கரசரால் பாடப்பெற்ற சிறப்புடைய ஸ்தலம்.ஆனந்தவல்லி உடனுறை அருள்மிகு ஜம்புகாரணேஸ்வரர் திருக்கோயில்.கும்பகோணத்திலிருந்து 20 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.இத்தலத்தின் சிறப்பு சிவன் ஆலயமாக இருந்தாலும் முருகப் பெருமானுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. முருகனின் சன்னிதி  ஆலயத்தின் முன்புறம் அமைந்துள்ளது. முருகனுக்கு ஏன் முக்கியத்துவம் வழங்கப்படுகிறது என்று புராண காலகதை உண்டு.

மகா ரிஷியான ரோம ரிஷி ஜம்புகாரணேஸ்வரர் அருளால் தனது தாடியிலிருந்து தங்கம் எடுக்கும்  சித்தியை பெற்றிருந்தார். ஏழை எளிய மக்களுக்கு பொன்னை கொடுத்து உதவினார். ஒரு முறை சிவன் தன்னுடய திருவிளையாடலை  ரோம ரிஷியிடம்காண்பித்தார். தாடியிலிருந்து பொன் எடுக்கும்  சக்தியை நிறுத்தினார். முன்பு போல் ஏழைகளுக்கு உதவ முடியவில்லையே என்று எண்ணி வருத்த முற்ற ரோமரிஷி தன்னுடைய தாடியை நீக்கினார்.  சிவனை எண்ணியே இருந் தவர்  தன்னை சுத்தப்படுத்திக்கொள்ளாமல் சிவனை காண ஆலயத்துக்குள் நுழைய முற்பட்டார்.

நீராடமல் சிவனை தரிசிக்க வந்த ரோம ரிஷியை வாசலில் தடுத்து நிறுத்திய முருகனும், பிள்ளையாரும் அவரது தவறை எடுத்துரைத்தார்கள். செய்ய தகாத தவறை செய்துவிட்டேனே.. எம் பெருமானே என்று  ஆலய வாசலிலேயே அமர்ந்து மனம் வருந்தி தவம் செய்ய துடங்கினார் ரோமரிஷி.  தவத்தைக் கண்டு மனம் இறங்கிய சிவப்பெருமான் காட்சிதந்து   அவருக்கும் மேலும் பல ஆற்றல் கள் தந்து அருளினார். இத்திருவிளையாடல் மூலம் வெளித்தூய்மையை விட மனத்துய்மையே  பெரியது என்னும் உண்மையை உலகுக்கு உணர்த்தினார்  என்று கூறுகிறார்கள்.

இதுபோல் இனி இங்கு தவறு நடக்கக்கூடாது என்று முருகப்பெருமான வாசலி லேயே அமர்ந்துகொண்டார். சனி பகவான் தன்னுடைய  தான் பெற்ற சாபத்தை நீக்கிகொள்ளும் பொருட்டு அங்கிருக்கும் தீர்த்தத்தில் நீராடி தினமும் சிவனை வழிபடுவது வழக்கம். ஒருமுறை நீராடிய பின்  சிவனை தரிசிக்க ஆலயத்தில் நுழைய முற்பட்டார்.   அப்போது அவரை தடுத்து நிறுத்திய முருகப்பெருமான் சனி தோஷங்களால் பாதிக்கப்படும் பக்தர்கள் இத்தலத்தில் வந்து என்னை  வழிபட்டால் உடனே தோஷங்களை நிவர்த்தி செய்வேன் என்று  நீங்கள் சம்ம தித்தால் தான் உள்ளே செல்லம்  முடியும் என்று உறுதியாக சொல்லிவிட்டாராம்.

ஏற்கனவே தனக்கு ஏற்பட்ட சாபத்தை நீக்கிக்கொள்ள் கூந்தலூர் ஜம்பு காரணேஸ்வரர் அருள் வேண்டுமே என்று நினைத்து சனி பகவானும் அப்படியே ஆகட்டும் என்று முருகனிடம் வாக்கு கொடுத்து முருகன் எதிரிலேயே தனது தவத்தால் சாபத்தை நீக்கி கொண்டாராம். முருகன்  ஈசானிய பார்வையில் சனீஸ் வரரை நோக்கி இருப்பதால் சனீஸ்வர பகவான் பக்தர்களுக்கு அளிக்கும் தொல் லையை இந்த முருகனிடம் அண்டினாலே களைந்துவிடுவார் என்பது ஐதிகம். இந்த ஆலயத்தினுள் சனி மற்றும் செவ்வாய்  கிரக சன்னிதிகள் எதிர் எதிராக அமைந்துள்ளதால் சனி மற்றும் செவ்வாய் கிரகத்தின் பாதிப்புகளை பரிகாரத் தலமாக கூந்தலூர்  ஜம்புகாரணேஸ்வரர் தலம் இருக்கிறது.

சனி  மற்றும் செவ்வாய் கிரக பாதிப்புகளில் சிக்குண்டு இருப்பவர்கள் கூந்தலூர்  சென்று முருகனை சந்தியுங்கள். வெற்றிகரமாக மீண்டு விடுவீர்கள்.

Sharing is caring!