சனி பகவான் யார் …? உங்களுக்கு என்ன செய்வார்..? அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்!

இவர் பெயரைக் கேட்டாலே அண்ட சராசரமே ஆடிப்போகும். சாதாரண மனிதர் முதல், சகல சம்பத்துகளும் பெற்ற தேவர்கள் வரை நடுங்குவார்கள்.நீதிமான். நியாயவாதி. அதனால்தான் தராசு சின்னம் கொண்ட துலாம் ராசியில் உச்சமாகிறார். கரிய நிறம் கொண்ட சனிபகவான் காசிப கோத்திரத்தில் பிறந்தவர். ஜோதிட சாஸ்த்திரத்தில் ஆயுள் காரகன் என்ற அதி முக்கியமான பதவியில் இருப்பவர். சூரியபகவானின் இரண்டாவது புதல்வர்.

அப்போ முதல் புத்திரர்…..அது யமன். பின்னவர் ஆயுளை வளர்த்தால், முன்னவர் ஆயுளை பறிக்கும் தொழிலை செய்பவர். சகோதரி யமுனை. காக்கையை வாகனமாக கொண்டவர். ஈஸ்வர பட்டம் பெற்றவர்களில் சனியும் ஒருவர்.புரட்டாசி மாதம் சனிக்கிழமை ரோகினி நச்சத்திரம் கூடிய சுபயோக சுப தினத்தில் தகப்பனார் ஸூரியபகவானுக்கும்இ தாயார் சாயாதேவிக்கும் பூர்வ புண்ணிய பொங்கு சோபன புத்திரன் சனீஸ்வரன் என்ற சனிபகவான் ஜனனமானார்.அவர் பிறந்தநாளைதான் புரட்டாசி மாதம் வரும் ஒவ்வொரு சனி கிழமையும் விரதம் இருந்து அனுஷ்டிக்கிறோம். எதற்கு? நீடித்த ஆயுளை பெற, சனிபகவானின் அருளை பெற. இது கோவிந்தனுக்கும் உரிய நாள் என்பது உண்மைதான். எள்தான் இவரது தானியம். அந்த எள் விஷ்ணு பகவானின் வியர்வையில் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. இங்கே குறிப்பிட்டாக வேண்டிய ஒரு விஷயம் இது. மற்ற கிரகங்கள் என்னதான் யோக நிலையில் இருந்தாலும் சனிபகவானின் சம்மதம் இல்லாவிட்டால் யூகத்தை பெறுவதற்கான சந்தர்ப்பம் இல்லை.அதே சமயம் சனி கொடுக்க துணிந்து விட்டால், சும்மா அதிரும்முள்ள என்று சொல்கிற மாதிரிதான் இருக்கும். எதுக்குடா வம்பு என்று மற்ற கிரகங்கள் விலகி கொள்ளும்.

Sharing is caring!