சரணடைபவர்களை காக்கும் அபயவரதீஸ்வரர்

அபயம் என்று சரணடைந்தால் வந்தேன் என்று காப்பவர் அபயவரதீஸ்வரர். அகிலத்தை ஆளும் அகிலாண்டேஸ்வரனின் நட்சத்திரமான திருவாதிரை நட்சத் திரத்தில் பிறந்தவர்கள்  தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிராமபட்டினத்தில் வீற் றிருக்கும் அபயவரதீஸ்வரை வழிபட்டு வேண்டியதைப் பெறலாம். திருவாதிரை நட்சத்திரத்தன்று சித்தர்கள் அரூப வடிவில்  இத்தலத்துக்கு வந்து வழிபடுவதாக  சொல்லப்படுகிறது.  திரிநேத்ர சக்தி கொண்ட தலம் இது.

மூலவர் அபய வரதீஸ்வரர். தாயார் சுந்தர நாயகி..  இங்கு  அம்மன் தெற்கே கடலை  நோக்கி  காட்சித் தருகிறாள். அம்மனுக்கு கடலை பார்த்த நாயகி என்ற பெயரும் உண்டு. பிரதோஷ காலங்களிலும் திருவாதிரை நட்சத்திர நாளன்றும் சிவப்பெருமான் உலா வருவது வழக்கம். அப்படி உலா வரும்போது திருவாதிரை நட்சத்திர மண்டலத்துக்குள்ளும் செல்வார்.

ஒருமுறை அசுரர்கள் முனிவர்களையும், தேவர்களையும் அச்சுறுத்தியபோது அசுரர்களின் தொல்லை தாங்காமல் இவர்கள் திருவாதிரை நட்சத்திர மண்டலத் துக்குள் நுழைந்து கொண்டார்கள். சிவ பெருமான் அபயம் தரும் இந்நட்சத்திர மண்டலத்துக்குள் அசுரர்கள் நுழைய அச்சப்படுவார்கள்.  திருவாதிரை நட்சத் திர மண்டலத்தைக் காக்கும் சிவபெருமான் அங்கு அபயம் தேடி வருபவர் களையும் காக்கிறார். அதனால்தான் இத்தலத்து இறைவன் அபயவரதீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.

எமபயம் உள்ளவர்கள், ஆயுள் விருத்தி வேண்டுபவர்கள் இத்தலத்தில் ஆயுஷ் ஹோமமும், மிருத்யுஞ்ஜய ஹோமமும்திருக்கடையூருக்கு அடுத்த படியாக இங்குதான் நடக்கிறது. திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் குறிப்பாக பெண்களுக்குத் திருமணம் நடைபெறுவதில் தோஷம் இருந்தால் இத்தலத்து அபயவரதீஸ்வரரை வேண்டினால் எத்தகைய தோஷமாக இருந் தாலும் அவை நிவர்த்தி அடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்த மன்னனான அதிவீரராம பாண்டி யன் அபய வரதீஸ்வரரை வழிபட்டு அரிய திருப்பணிகள் செய்திருக்கிறான். சம்பந்தர் பாடலில் இத்தலம் வைப்புத்தலமாக போற்றப்படுகிறது. திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்  வாழ்நாளில் நேரம் கிடைக்கும் போது அபய வரதீஸ்வரரைத் தரிசித்து  தோஷத்திலிருந்து விடுபடலாம். ராகு-கேது தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களும் அபயவரதீஸ்வரரை அணுகினால் அப யம் அளித்து துன்பத்தை நீக்குவார்.

Sharing is caring!