சரஸ்வதிக்கு மட்டுமே உள்ள சிறப்பு!

ஆண்டு முழுவதும் பல பண்டிகைகள் கொண்டாடி இறைவனை வணங்க பூஜை செய்கிறோம். ஆனால் அந்த பண்டிகையின் பெயருடன் பூஜை என்ற சொல் சேர்ந்து வருவதில்லை.

ஞான கடவுளான சரஸ்வதியை வணங்கும் பூஜைக்கு மட்டுமே, சரஸ்வதி பூஜை என்று பெயர்.  பூஜா என்ற வார்த்தையில் பிறந்ததே பூஜை என்றசொல். நாம் செய்யும் பூஜை என்பது, நமக்குள் ஓர் ஞான பூர்த்தியை ஏற்படுத்த வேண்டும்.

மும்மலங்களான ஆணவம், கன்மம், மாயை-யை அகற்றி ஞானத்தை உண்டாக்க செய்வதே பூஜை. அத்தகைய ஞானத்தை தருபவளான சரஸ்வதிக்கு மட்டுமே, பூஜை என்ற வார்த்தை சேர்ந்து வரும்.

Sharing is caring!