சருமத்தை பாதுகாக்க கண்ணேறு கற்றாளை

பல வீடுளின் வாயில்களில் கண்ணேறு கற்றாழை கட்டியிருக்க காரணம் மூடந‌ம்பிக்கையல்ல! அத்தனையும் மருத்துவம். கண்ணேறு  கற்றாழையில் படிகார‌க்கல், எலுமிச்சை, மிளகாய் ஆகியவற்றை, சோற்று கற்றாழையுடன்  சேர்த்து கட்டியிருப்பர். இதில் இருக்கும்  பொருட்கள் அனைத்திலும்  மருத்துவ குணம் அதிகம்….   முதலில் கற்றாழையை பற்றி தெரிந்து கொள்வோம்.

கற்றாழையில் 500 இனங்கள் இருப்பினும், சில கற்றாழை இனங்களே பாரம்பரியமாக மூலிகை மருந்தாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.  இந்த தாவரத்தை கிரேக்கர்களும், ரோமர்களும் காயங்களுக்குச் சிகிச்சை அளிப்பதற்காக  பயன்படுத்தினர்.

இதில் கால்சியம், குளோரின், சோடியம், பொட்டாசியம் மற்றும் மாங்கனீசு போன்ற சத்துகள் உள்ளன. மேலும் காற்றாழை ஜெல்லில்  வைட்டமின் ஏ, பி1, பி2, பாலிசாக்கரைடுகள் மற்றும் யூரிக் அமிலம் போன்ற சத்துக்கள் நிறைந்திருப்பதால் உடலில் ஏற்படும் பல நோய்களுக்கு இது தீர்வாக அமைகிறது.

மேலும்  சோற்று கற்றாழையில் உள்ள ஜெல்லி போன்ற திரவம் சிறிய தீக்காயங்கள், அடிபட்ட‌ காயங்கள் மற்றும் படைநோய், படர்தாமரை போன்ற பல தோல்  நோய்களை  ஆற்றுவதற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது காயங்களின் மேலே ஒரு மெல்லிய தோல் போன்ற படலத்தை ஏற்படுத்தி, நோய்த்தொற்றுகள் ஏற்படும் வாய்ப்பைக் குறைக்கிறது .

அதுமட்டுமல்ல கற்றாழை சாறு அல்லது கற்றாழையில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணையை கோடைகாலங்களில் நமது மேற்புற தோலில் பூசிக்கொள்வதால் சரும நோய்கள் எதுவும் ஏற்படாமல் தடுக்க முடிகிறது.மேலும் சோற்று கற்றாழையில் உள்ள‌ ஜெல்லியை உட்கொள்வதால் உடலில் கட்டிகள் ஏற்படுவதை தடுக்கலாம்.

Sharing is caring!