சர்க்கரை நோயாளிகளுக்கு அரிய மருந்து?

குறைவான விலையில் கிடைக்கும் வேர்க்கடலை புரதம் நிறைந்த ஒரு உணவுப் பொருள். அதில் நிறைந்திருக்கும் சத்துக்கள் அபாரமானது.

சர்க்கரை நோயாளி, ரத்த அழுத்தம் இருப்பவர்கள் சாப்பிடக் கூடாது என்று ஒரு வதந்தி இன்று வரை இருக்கின்றது. உண்மையில் வேர்க்கடலையில் நல்ல கொழுப்புகள் தான் அதிகம் உள்ளது.

இதனை சாப்பிட்டால் இதய நோய்கள் மற்றும் ரத்த அழுத்தம் வருவது குறைக்கப்படுகிறது ஆராய்ச்சியாளர்கள் கண்டுப்பிடித்துள்ளனர்.

சர்க்கரை நோயளிகளின் கவனத்திற்கு!

வேர்க்கடலை சாப்பிடுவதால் குளுகோஸ் அளவு ரத்தத்தில் அதிகமாவதில்லை. மிகக் குறைவாகவே குளுகோஸ் அளவு அதிகரிக்கிறது.

அதோடு இதில் உள்ள அதிகப்படியான மெக்னீசியம் இன்சுலின் சுரப்பை அதிகரிக்கச் செய்கிறது. எனவே சர்க்கரை வியாதி உள்ளவர்கள் வேர்க்கடலை சாப்பிட்டால் நன்மைகளே தருகிறது.

பொதுவாக உணவு சாப்பிட்டபின் குளுகோஸ் அளவு அதிகரிக்கும். ஆனால் வேர்கக்டலை சிறிது சாப்பிட்டால், உணவிற்கு பின்னும் குளுகோஸ் அளவு குறையச் செய்ய முடியும். அதோடு சோடியம் அளவையும் கட்டுப்படுத்துவதால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.

இதேவேளை, வேர்க்கடலை சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிக்காது. அதோடு பசியின்மையை ஏற்படச் செய்யும். குறைவாக சாப்பிட்டாலெ வயிறு நிறைந்துவிடும்.

இதனால் அளவுக்கு அதிகமாக உண்வை சாப்பிட தூண்டாது.

இதனை ஸ்நேக்ஸாக குழந்தைகளுக்கு தரும்போது உடல் வளர்ச்சி நன்றாக இருக்கும். அது மாத்திரம் இன்றி, வேர்க்கடலை புற்று நோய் உருவாவதை தடுக்கிறது.

மார்பக புற்று நோய், மலக் குடல் ஆகியவற்றை வராமல் காக்கின்ரன. புற்று நோய் செல்களையும் அழித்து மேற்கொண்டு பரவாமல் தடுக்கும் ஆற்றலுள்ள உயிர் வேதிப் பொருட்கள் வேர்க்கடலையில் உள்ளது.

சக்கரை வியாதி இருந்தால் இதய நோய், புற்று நோய் என்று அனைத்தும் தொற்றி கொள்ளும். இந்நிலையில், சக்கரை நோயை தடுக்க உதவும் வேர்கடலையை அளவாக சாப்பிட்டு அதிக பலன்களை பெற்று கொள்ளுகள்.

எப்படி சாப்பிடலாம்?
  • வேர்க்கடலையை எண்ணெயில் வறுத்து சாப்பிட வேண்டாம்.
  • அதனை அவித்து சாப்பிடுவது மிகவும் நல்லது.அதேபோல் அதிலுள்ள சன்னமான தோலை நீக்காமல் சாப்பிடுவது நல்லது.
  • ஏனென்றால் அதில்தான் அதிக சத்துக்கள் உள்ளன.

Sharing is caring!