சர்க்கரை நோயினால் அவதியா?

இன்று உலகில் பெரும்பாலானோர் அவதிப்படும் நோய்களுள் சர்க்கரை நோயும் ஒன்றாகும்.

40 வயதைக் கடந்தவர்கள் கண்டிப்பாகத் தங்களுக்குச் சர்க்கரை வியாதி இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்வது அவசியமானதாகும்.

குறிப்பாக சர்க்கரை நோய் வருவதற்கு முன்பாகவே சர்க்கரை நோயை தடுத்து நிறுத்த சில விஷயங்களை செய்தால், சர்க்கரை நோய் பாதிப்பிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும்.

அந்தவகையில் தற்போது சர்க்கரை நோயை குறைக்க கூடிய எளிய வழிமுறைகள் என்பதை பார்ப்போம்.

  • வெந்தயத்தை வறுத்து, பொடி செய்து வைத்துக் கொண்டு, தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோயை முழுமையாகக் கட்டுப்படுத்தலாம்.
  • பாகற்காயை வெட்டி, நன்கு காயவைத்துப் பொடி செய்து காலை, இரவு என்று இரண்டு வேளை தொடர்ந்து சாப்பிடக் கண்டிப்பாகச் சர்க்கரை நோய் முழுமையாகக் குறையும்.
  • சிறுகுறிஞ்சான் இலையை பொடி செய்து, தினமும் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் குறையும்.
  • வில்வ இலையை பொடி செய்து, காலையில் வெறும் வயிற்றில் வாயில் போட்டு தண்ணீர் குடிக்க, சர்க்கரை நோய் குறையும்.
  • ரோஜாப்பூ, கடுக்காய், ஜாதிக்காய் ஆகியவற்றை சேர்த்து அரைத்து, தினமும் சிறிதளவு சாப்பிட்டு, தண்ணீர் பருகி வந்தால் சர்க்கரை நோய் குறையும்.
  • வாழைப்பூ அதிகம் உணவில் சேர்த்துகொள்வது சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க உதவும்.
  • தினமும் ஒரு கோவைப்பழம் சாப்பிட்டு வந்தால் உடல் மெலிதல், நீரிழிவு நோய், போன்ற சர்க்கரை நோய் சம்மந்தப்பட்ட நோய்கள் கட்டுப்படும்.
  • தொட்டாற் சுருங்கியின் இலை, வேர் இரண்டையும் காய வைத்து, பொடி செய்து, பாலில் கலந்து காலை நேரத்தில் குடிக்க, சர்க்கரை நோய் குறையும்.
  • வேப்பம் பூ பொடி, நெல்லிக்காய் பொடி, துளசி பொடி, நாவல் கொட்டை பொடி நான்கையும் சேர்த்து சாப்பிட்டு வர, சர்க்கரை நோய் குறையும்.
  • ஆவாரம் பூ, கறிவேப்பிலை, நெல்லிக்காய் இவை மூன்றையும் சேர்த்து, அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயின் தாக்கம் குறையும்.

Sharing is caring!