சர்க்கரை நோய்க்கு தீர்வு வேண்டுமா?

ஆவாரம் பூ எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டது. இன்றைய உலக மக்கள் தொகையில் பாதிபேர் சர்க்கரை நோயால் அவதிப்படுகின்றனர்

இந்த சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் குணம் ஆவாரைக்கு உண்டு

இது சக்கரை நோய்க்கு மட்டுமின்றி மேக நோய்கள், நீர்கடுப்பு, உள்ளங்கால் எரிச்சல், சிறுநீர் எரிச்சல், வெள்ளைப்படுதல் போன்ற நோய்களுக்கான மருத்துவத்திற்கு பயன்படுகிறது.

அந்தவகையில் இதனை கொண்டு பானம் தயாரித்து குடித்து வந்தால் உடலுக்கு நல்ல பயனை தருகின்றது.

தற்போது இந்த அற்புத பானத்தை எப்படி தயாரிப்பது என்பதை பார்ப்போம்.

தேவையான பொருட்கள்
  • ஆவாரம் பூ – 200 கிராம்
  • சுக்கு – 2 துண்டு
  • ஏலக்காய் – 3
  • உலர்ந்த வல்லாரை இலை – 200 கிராம்
  • சோம்பு – 2 டீஸ்பூன்
செய்முறை

மேற்சொன்ன அனைத்துப் பொருட்களையும் ஒன்றாகச் சேர்த்து ஒன்றிரண்டாகப் பொடித்து வைத்துக்கொள்ளவும்.

தேவையானபோது அதில் கையளவு எடுத்து அரை லிட்டர் தண்ணீர் ஊற்றி கால் லிட்டராக ஆகும்வரை சுண்டக் காய்ச்சவும்.

அதை வடிகட்டி தேவையான அளவு பனை வெல்லம் அல்லது பனங்கற்கண்டு சேர்த்துக் குடிக்கலாம்.

சர்க்கரை நோய்க்கு கைகண்ட மருந்து சிறுநீர்க் கோளாறுகளை நிவர்த்தி செய்யும்.

இதய நோய் வாய்ப்புண் சரும நோய்களைப் போக்கும் ஆற்றல்கொண்டது. உஷ்ணத்தைக் குறைத்து உடலைக் குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளும்.

Sharing is caring!