சளித்தொல்லைகள் நீங்க

குளிர்க்காலத்தில் மிளகு சேர்க்கப்பட்ட காய்கறி சூப்பை அடிக்கடி குடித்து வந்தால் தொண்டைப் புண், வறட்டு இருமல், சளித் தொந்தரவு ஆகியவை குணமாகும்.

தினமும் இரண்டு துளசி இலைகளை மென்று சாப்பிட்டு வந்தால் குளிர்காலம் சம்பந்தமான எந்த நோயும் அண்டாது.

சைனஸ் தொந்தரவு உள்ளவர்கள் ஒரு டீஸ்பூன் விபூதியை தண்ணீரில் குழைத்து நெற்றி, முக்கு, கண்ணின் கீழ்ப்பாகம் ஆகிய இடங்களில் பற்று போட்டால், முகத்தில் கோத்திருக்கும் அதிகப்படியான நீர் வற்றிவிடும். மூக்கடைப்பு, சளித்தொல்லை நீங்கும்.

ஞ்சி சாறு, வெங்காயச் சாறு, எலுமிச்சை சாறு ஆகியவற்றை சம அளவில் கலந்து மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் சளியும் இருமலும் மூன்றே நாட்களில் காணாமல் போய்விடும்.

குளிர்க்காலத்தில் கால்களில் ஏற்படும் வெடிப்பைத் தவிர்க்க தினமும் இரவில் உறங்கும் முன் பாதங்களில் ஆலிவ் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்யலாம். வேப்பிலை, மருதாணி, மஞ்சள் மூன்றையும் அரைத்துப் பூசினாலும் பாத வெடிப்பு குணமாகும்.

Sharing is caring!