சளி, இருமல் உடனே குணமாக வேண்டுமா?

மழைக் காரணமாக குழந்தை முதல் பெரியவர்கள் வரை சளி, தொடர் இருமல், நெஞ்சு சளியால் அவதிப்பட்டு வருகின்றனர்.

இது பருவநிலை மாற்றத்தால் வரக் கூடியது என்றாலும் அதை அப்படியே விடுவது மற்ற நோய்களையும் உருவாக்கலாம்.

இதைத் தடுக்க ஆரம்பத்திலேயே உரிய சிகிச்சை அளிப்பது நல்லது. இதற்கு வாழைப்பழம் உதவியாக இருக்கின்றது.

அந்தவகையில் வாழைப்பழத்தை கொண்டு சளி, இருமலை எப்படி போக்கலாம் என பார்ப்போம்.

தேவையானவை
  • வெந்நீர் – 400 மில்லி
  • கருப்பு புள்ளி உள்ள பழுத்த வாழைப்பழம் – இரண்டு
  • தேன் – டேபிள் ஸ்பூன் இரண்டு
செய்முறை

கரும்புள்ளி விழுந்த பழுத்த வாழைப்பழத்தை தோல் நீக்கி, மசிக்க வேண்டும். மசிக்கும் போது மரத்தாலான கரண்டியை பயன்படுத்த வேண்டும்.

மசித்த வாழைப்பழத்தை ஒரு மண் பானையில் போடு வையிங்கள். அதில் வெந்நீரை சேர்க்கவும். இதை 30 நிமிடங்கள் விட்டுவிடவும்.

வெந்நீரில் கலந்த மசித்த வாழைப்பழம் குளுமை அடைந்தவுடன், தேன் சேர்க்கவும். பிறகு நன்கு கலக்கவும்.

தேனை முன்கூட்டி சேர்த்துவிட வேண்டாம். மசித்த வாழைப்பழம் வெந்நீர் சூடாக இருக்கும் போது தேன் கலந்தால், தேனின் நற்குணங்கள் இழந்துவிடும்.

நூறு மில்லி அளவில் ஒரு நாளுக்கு நான்கு முறை உட்கொள்ள வேண்டும். (ஒரு நாளுக்கு நானூறு மில்லி)

ஒரு நாளுக்கு நானூறு மில்லி போதுமானது. தினமும் புதியதாக தயாரித்து உட்கொள்ள வேண்டும். இதன் பலன் ஐந்து நாட்களில் பெறலாம்.

Sharing is caring!