சாணம் தெளிப்பதன் பின்னணி இதுதான்?

அன்றாடம்  அதிகாலையில் எழுந்து வீட்டின் முன் சாணம் பூசி மெழுகுவது வீட்டின் ஆரோக்யத்தையும், விஷ ஜந்துக்களையும் அண்டவிடாது. கூடவே உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சியை உண்டாக்கும். மேலும் வெட்ட வெளி யில் இலேசான நடைபயிற்சி அன்றைய பொழுது முழுவதும் பரபரப்பின்றி விவேகத்துடன் செயல்பட உதவும் என்பதை அறிவியலாளர்கள் இன்று விளக்கு வதைத்தான் முன்னோர்கள் அன்றே ஆன்மிகத்தோடு தொடர்பு படுத்திவிட் டார்கள்.

ஆன்மிக ரீதியில்:

அதிகாலையில்  சூரிய உதயத்துக்கு முன்பாக எழுந்து வீட்டின் பின்புறக் கதவை திறந்து வைக்க வேண்டும். வீட்டில் இருக்கும்  மூதேவி வெளியேறி விடுவாள்.  முன்வாசல் கதவு திறந்ததும் ஸ்ரீ தேவி உள்நுழைவாள். அதனால் காலையில் எழுந்ததும் புறவாசலைத் திறந்து வைத்த  பிறகே வீட்டின் முன் வாசலைத்  திறக்க வேண்டும் என்று முன்னோர்கள் கூறுவார்கள். கூடவே அதி காலையில் வீட்டின் முற்றத்தை மாட்டுச் சாணத்தால் மெழுகி அரிசி மாவில் கோலமிட்டால்  மஹாலஷ்மி மகிழ்ச்சியுடன் வீட்டுக்குள் பிரவேசிப்பாள் என்ப தும் காலங்காலமாக  கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஐதிகங்களில் ஒன்று. வாசல் படியில் அகல் தீபம் ஏற்றிவைத்தாள் லஷ்மி நிரந்தரமாக வசிப்பாள் என்று இந்து மதம் சொல்கிறது.

விஞ்ஞான ரீதியாக:

மாட்டுச்சாணம் சிறந்த கிருமி நாசினி. வீட்டின் முற்றத்தில் சாணம் தெளித்து பூசினால் விஷ ஜந்துக்கள் வீட்டுக்குள் வராது.  வெளியிலிருந்து வீட்டுக்குள் வரும்போது பாதங்களில் ஒட்டியிருக்கும் கண்ணுக்குத் தெரியாத கிருமிகள் சாணம் தெளித்த வீட்டின் முற்றத்தில் பாதம் வைக்கும் போது அழிக்கப்படுகிறது.  சோர்வு, ஆரோக்ய குறைபாடு போன்றவற்றை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்து கிறது.  கடுமையான விஷத்தைப் போக்கும் தன்மை சாணத்துக்கு உண்டு. எதிர் மறை ஆற்றல் என்பது மனச்சோர்வு உண்டாவதால் ஏற்படுகிறது.  வெளியிலிருந்து வரும் எதிர்மறை ஆற்றல்கள் வெளியிலேயே தடுத்து நம் மனதுக்கு புத்துணர்ச்சி தரும் சக்தி சாணத்துக்கு உண்டு என்பது விஞ்ஞானத்தால் நிரூ பிக்கப்பட்டுள்ளது.

சாணம் தெளிப்பது மட்டும் தான் இங்கு கொடுத்திருக்கிறோம். அது போன்று கோலமிடுதலும் கூட ஆன்மிக ரீதியாகவும், விஞ்ஞான ரீதியாகவும் ஆச்சரியப் பட வைக்கிறது.  ஆச்சரியங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

Sharing is caring!