சாய்பாபாவின் அற்புதங்கள்!

சாய்பாபா தனது பக்தர்களுக்கு எத்தனையோ அற்புதங்களை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார் .தன்னை நம்பிவந்த எவரிடமும் பரிவும் ,பாசமும் காணபிக்காமல் அவர் இருந்ததே இல்லை .அவரது சக்திக்கு உட்பட்டதாக இருப்பின் அதனை வலியச் சென்று செய்து வழங்கி இருக்கிறார் சாய்பாபாநேரிலும் ,கனவு வழியாகவும் நன்மைகள் பலவற்றைச் செய்திருக்கும் சாய்பாபா அதுகுறித்து பிறர் யாரிடமும் பெரிதாக விளம்பரப்படுத்திக்கொண்டதே இல்லை என்பது அழுத்தமான உண்மை அது தான் சாய்பாபாவின் தனிசிறப்பு .அங்கு தான் சாய்பாபா கடவுளின் மறுஅவதாரமாகவே பக்தா்களால் உணரப்படுகிறார் அவர் செய்த பல்வேறு அற்புதங்களை இனி பார்க்கலாம்.

மும்பையைச் சேர்ந்த “தர்கட்” என்பவர் சாய்பாபா மீது அபார பக்தி கொண்டவர். அவரது மனைவி மற்றும் மகனும் அப்படியேதர்கட்டின் மகன் தினமும் சாய்பாபாவிற்கு பூஜை செய்து ,நைவேத்தியம் படைத்து வழிபடுவது வழக்கம்அது மே மாதம் அவனுக்கு விடுமுறை. “ஷீரடி” செல்லும் ஆசை துளிர்விட்டது ஆனால் தா்கட்டிற்கு அலுவலகத்தில் வேலைப் பளு அதிகம்விடுப்பு எடுக்க வாய்ப்பில்லைஆகவே, மனைவியும்,மகனையும் ஷீரடி சென்று வருமாறு கூறினார்.

ஆனால் அவரது மகனுக்கு மட்டும் ஒரு சிறிய தயக்கம் இருந்ததுகாரணம் தினமும் சாய்பாபாவிற்கு நைவேத்தியம் படைத்து பூஜை செய்வதில் தடங்கல் ஏற்பட்டுவிடுமே என்பதுதான்.அவனது தயக்கத்தைக் கேட்டறிந்த தர்கட், ” நீ கவலைப்படாமல் ஷீரடி சென்று வாஉனக்குப் பதிலாக சாய்பாபாவிற்கு நானே நைவேத்தியம் மற்றும் பூஜையை ஒழுங்காகச் செய்து வருகிறேன்பயப்படாமல் போய் வா . “என் மீது நம்பிக்கை வை“. என்றார்.

தந்தையின் வாக்கின் மீது நம்பிக்கை வைத்து அவரது மகனும் ஷீரடிக்குக் கிளம்பினான் .தர்கட்டும் தவறாமல் பூஜைகள் செய்துவந்தார்.ஆனால் சோதனை என்பது அனைவருக்கும் வருவது தானேஅது தர்கட்டிற்கும் வந்ததுஒருநாள் அலுவலக வேலை காரணமாக அவசரமாகச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் அவருக்கு ஏற்பட்டதுஅவசர அவசரமாக சாய்பாபாவிற்கு பூஜைகள் செய்துவிட்டு கிளம்பினார்ஆனால் நைவேத்தியம் படைக்க மட்டும் மறந்துவிட்டார் .வழக்கம்போல் மதிய சாப்பாட்டிற்கு வீட்டிற்கு வந்தார் தா்கட் வேலைக்காரனும் அவருக்கு உணவை எடுத்துப் பரிமாறினான் ஆனால் நைவேத்தியத்தை மட்டும் அவன் வைக்கவில்லை.

அவனிடம் நைவேத்தியத்தை வைக்குமாறு கேட்டார் தா்கட்அப்போது அவன் பணிவோடு சொன்னான் , “ஐயா இன்று பூஜை மட்டும் தான் செய்தீர்கள் நைவேத்தியம் படைக்கவில்லை ” என்றான்துணுக்கென்றது தர்கட்டிற்கு அவசரத்தில் நைவேத்தியம் படைக்க மறந்து போனது அவருக்குப் பெரிதும் வருத்தத்தைக் கொடுத்தது உடனே ஷீரடியில் இருக்கும் தன் மகனுக்கு இந்த விபரத்தைத் தெரிவித்து வருத்தத்துடன் கடிதம் ஒன்றை எழுதி அனுப்பினார்இதே வேளையில் ஷீரடியில் மற்றொரு அதிசயம் நிகழ்ந்த்து தர்கட்டின் மனைவி மற்றும் மகனிடம் சாய்பாபா, “இன்று என்னைப் பட்டினி போட்டுவிட்டீர்களே!” என்று மனக்குறையோடு கூறினார் .

Sharing is caring!