சாய்பாபாவின் உத்தரவு

பாவ் ஸாகேப் துமால் என்பவர் ஒரு  வழக்கறிஞர். தனது தொழிலில் அக்கறையும் ஆர்வமும் கொண்டவர். அதைவிட அதிகமாக சாய்பாபா மீது மரியாதையும் பக்தியும் கொண்டிருந்தார். ஒரு முறை அவர் ஒரு வழக்கு விசாரணைக்காக “நிபாட்” என்னும் ஊருக்குச் செல்ல நேர்ந்தது. வழியில் ஷீரடிக்குச் சென்று சாய்பாபாவைத் தரிசனம் செய்து விட்டு பின்னர் நிபாட்டுக்குச் செல்ல எண்ணினார்.

அதன்படி சாய்பாபாவை தரிசித்து அவரது அருளாசியைப் பெற்றார். பின்னர் நிபாட்டுக்குச் செல்லக் கிளம்பியபோது சாய்பாபா அவரைத் தடுத்து நிறுத்தினார். சாய்பாபா துமால் ஷீரடியிலேயே மேலும் சில நாட்கள் தங்கிவிட்டுச் செல்லுமாறு பணித்தார்.

ஷீரடிக்கு வருகை தரும் பக்தர்கள் யாரும் சாய்பாபாவின் உத்தரவைப் பெற்றுத்தான் அங்கிருந்து திரும்ப முடியும் என்பது நியதி. அதை எவராலும் மீற முடியாது என்பதும் உண்மை. சாய்பாபா சொல்வது எதுவாக இருந்தாலும் அதுவே சரியாகவே இருக்கும் என்பதில் அவருக்குப் பெரும் நம்பிக்கை இருந்தது.

‘நிபாட்’க்கு செல்லும் முன் வழக்கு முடிந்துவிடுமே என்று துமால் கவலை கொண்டாலும் சாய்பாபாவின் ஆணையை மீற முடியாமல் ஷீரடியிலேயே சில தினங்கள் தங்கி விட்டார். சாய்பாபா சொல்வது எதுவாக இருந்தாலும் அதுவே சரியாகவே இருக்கும் என்பதில் அவருக்குப் பெரும் நம்பிக்கை இருந்தது. அவரது நம்பிக்கை வீண் போகவில்லை!

நிபாட்டில் உள்ள நீதிபதிக்குத் உடல்நிலை சரியில்லாமல் போனதால், அதனால் அந்த வழக்கு விசாரணை தள்ளி வைக்கப்பட்டது. சாய்பாபாவின் சொற்படித் தங்கிவிட்டுப் பின்பு துமால், நிபாட் சென்று சேர்ந்த பிறகுதான் வழக்கு விசாரணை தொடர ஆரம்பித்தது. வழக்கில் துமால் வெற்றி பெற்றார்.

சாய்பாபா கூறியபடி நடந்து கொண்டதால், இடர் ஏதுமின்றி எளிதில் வெற்றி பெற முடிந்தது என்பதை உணர்ந்த துமால், சாய்பாபாவை மனமுருகிப் பிரார்த்தனை செய்து நன்றி கூறினார். சாய்பாபா மேல் நம்பிக்கை வைத்து  நம் வேண்டுதலை வைத்தாள், ஒரு போதும் தோற்று போவதில்லை.
ஓம்ஸ்ரீசாய்ராம் !!!

Sharing is caring!