சாய்பாபாவின் குணாதிசயங்கள்

தங்களது வீட்டைத் துறந்து ,காடுகளில், குகைகளில், துறவி மடங்களில் தனிமையில் இருந்து கொண்டு தங்களுக்கே விடுதலை அல்லது பரகதி தேட முயற்சிக்கு பல முனிவர்கள் உள்ளனர். அவர்கள் மற்றவர்களைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை. எப்போதும் அந்தராத்மாவிலேயே தம்மை மறுந்து மூழ்கி இருப்பார்கள்.
ஆனால், சாய்பாபா அவ்வகையைச் சாந்தவர் அல்ல.

அவருக்கு வீட்டு இல்லை, மனைவி  இல்லை, மக்களில்லை,சேய்மை அண்மை உறவினர்கள் யாருமே இல்லை.  எனினும் அவர் இவ்வுலகத்தில் வாழ்ந்தார்.  நாள்தோறும் வீடுகளிலிருந்து அவர் தமது உணவை பிச்சை எடுத்து உட்கொள்வாறு.  உலக விவகாரங்களை நடத்திக் கொண்டு, மக்களுக்கு உலகில் எங்ஙனம் நடக்கப் பழக வேண்டுமெனப் போதித்தார்.  கடவுட் காட்சியைப் பெற்றபின், மக்களின் சுபிட்சத்துக்காகப்  பாடுபடும் முனிவர்களையோ,  சாதுக்களையோ காண்பதரிது.  சாய்பாபா இவர்களில் எல்லாம் தலையாயவர்.  எனவே, ஹேமாட்பந்த் பின்வருமாறு கூறுகிறார்.

இத்தகைய,  சாதாரண அறிவெல்லை கடந்த விலை மதிப்பற்ற, தூய்மையான மாணிக்கக் கல் சாய்பாபா. அவரால், அவரித்த நாடு ஆசிர்வதிக்கப்பட்டது.  தூயவர்களாகிய அவரின் குடும்பம் ஆசீர்வதிக்கப்பட்டது. அவரின் பெற்றோர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். ஆகவே, சாய்பாபாவின்  குணமே சிறப்புக்கு  உரியது.   யாரும்  சாய்பாபாவின் இடத்தை நிரப்ப முடியாது.

Sharing is caring!