சாய்பாபாவின் சமாதி நிலை ஆஸ்துமா சிகிச்சை!

சாய்பாபா, ஆஸ்த்துமா நோய்த் தொல்லையால் வெகுவாகப் பாதிக்கப்பட்டு வந்தார்.  அதனை நிரந்தரமாக நீக்க அவர் முடிவு மேற்கொண்டார்.  அது சற்று வித்தியாசமானது வியப்பின் உச்சத்திற்கே கொண்டு செல்லக்கூடியது. மூச்சை அடக்கி சமாதி நிலையில் இருப்பது! தனது பக்தர் மகல் சபதியிடம் ஒரு நாள் ,” தன்னுடைய ஆஸ்த்துமா தொல்லையில் இருந்து முழுமையாக விடுதலைப் பெற ,தனது உயிரை மிக உயரே எடுத்துச் சென்று சமாதி நிலை அடையப் போகிறேன். இது மூன்றே மூன்று நாட்களுக்கு மட்டுமே அதன்பிறகு மீண்டும் உயிரை எடுத்துக் கொண்டு எனது உடலை வந்தடைவேன்.

அந்த மூன்று நாட்கள் மட்டும் உயிரற்ற எனது உடலை பாதுகாப்பது  உன் பொறுப்பு. அப்படி ஒரு வேலை மூன்றாவது நாள் எனது உயிர் திரும்பி வரவில்லை என்றால், எனது உடலைத் திறந்த வெளியில் புதைத்து , அந்த இடத்தில் இரண்டு கொடிகளையும் ஊன்றி விடு ” என்று கூறினார். இது அதிர்ச்சியும், வியப்புமாக இருந்தது  சபதிக்கு சாய்பாபா என்ன தான் சொல்கிறார் என்பதைத் தெளிவாக உணர்வதற்கே அவருக்குச் சற்று நேரம் பிடித்தது . ஆனாலும் மகானின் வாக்கை செயல்படுத்த முடியாது என்று மறுத்துச் சொல்ல முடியுமா என்ன? .
சம்மதித்தார்  மகல் சபதி .

ஆயிற்று அன்றிரவு சுமார் 10 மணி இருக்கும். சாய்பாபா தரையில் அப்படியே சாய்ந்தார் . ஏற்கெனவே கூறியபடி அவரது உயிரை எங்கோ கொண்டு சென்று விட்டார். ஒரு நாள் சென்றது . இரண்டாவது நாளும் நகர்ந்தது. சாய்பாபா மரணமடைந்து விட்டதாகவே , அவ்வூர் மக்கள் கருதினர்.  உடலை அடக்கம் செய்யாமல் அப்படியே போட்டு வைத்திருப்பது ஊருக்கு நல்லதல்ல என்றும் ஒரு சாரார் பேசத் தொடங்கினர்.  இதனிடையே காவல்துறைக்கு புகார் தெரிவிக்கப்பட்டுவிட்டது . வாகனத்தில் அங்கு வந்திறங்கினார் .

காவல் துறை அதிகாரி . “பிணத்தை இப்படி வைத்திருப்பது சட்டப்படி தவறு உடனடியாக அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளைக் கவனி” என்று மிரட்டல் விடுத்தார்.  ஆனால், அதெப்படி முடியும்? மூன்று நாட்களுக்குத் தன் உடலைப் பாதுகாக்கும் படி சாய்பாபா ஆணையிட்டுள்ளாரே!
சாய்பாபா தனக்கிட்ட கட்டளையை அதிகாரியிடம் விவரித்தார் மகல் சபதி. தனக்காக மனம் இரங்குமாறு கெஞ்சவும் செய்தார் .சரியாக மூன்று நாட்கள் மட்டுமே அவகாசம் தருவதாகவும், நான்காவது நாள் தொடங்கியதுமே, சாய்பாபா உடலை அடக்கம் செய்துவிட வேண்டும் என்றும் அதிகாரத் தொனியில் மிரட்டிவிட்டுச் சென்றார் காவல்துறை அதிகாரி.

திக்…திக் என்று அடித்துக் கொண்டது சபதி இதயம்! அதன் துடுப்பு அருகிலிருந்தவர்களுக்குக்கூட கேட்டிருக்கும். தன்னிடம் கூறியது போலவே சாய்பாபா மூன்றாவது நாள் கூறியது போலவே வந்துவிட வேண்டும் என்று துடிதுடிப்புடன் காத்திருந்தார் சபதி . சாய்பாபாவின் உயிரற்ற உடல்! அருகே பெருந்திரளாக ஜனங்கள் ! அத்தனை பேர் கண்களிலும் ஒரு வித ஆச்சர்ய எதிர் பார்ப்பு! நிகழுமா இந்த அதிசயம் என்பதைக் கண்டுணரும் ஆவல்!

Sharing is caring!