சாய்பாபாவின் நல்லடக்கம்!

சாய்பாபாவின் மரணம் பக்தர்களை சோகத்தில் ஆழ்த்தியதைவிட மற்றொரு துன்பகரமான நிகழ்ச்சி நடந்தது தான் சோதனை.

சாய்பாபாவின் உடலை எங்கு நல்லடக்கம் செய்வது ?

மரத்தைத் தழுவும் தறுவாயில் தகடிவாடாவின் எழுப்பப்பட்ட கல் கட்டிடத்தின் நடுவே குழி தோண்டுமாறு சாய்பாபா உத்தரவிட்டது ஷாமா பாட்டீல் என்ற பக்தரின் மனதில் ஒடியது. அது ,அவரின் பூத உடலை நல்லடக்கம் செய்வதற்கான சாய்பாபாவின் உத்தரவு என்பதில் அசைக்க முடியாத உறுதி அவருக்கு இருந்தது.

ஆகவே, அனைவரிடமும், சாய்பாபாவின் உடலை தகடிவாடாவில் தான் அடக்கம் செய்ய வேண்டும் என்பதை அழுத்தமாகத் தெரிவித்தார். அதனை அவரது பக்தர்கள் பலரும் ஆமோதித்தனர்.  ஆனால் ,அவ்வூர் முஸ்லிம் அன்பர்கள் அதனை ஏற்றுக்கொள்ள மறுப்பு தெரிவித்தனர் . தகடிவாடாவில் அடக்கம் செய்வதற்குத் தங்களின் கடும் எதிர்ப்பையும் வெளியிட்டனர் . மாறாக, தங்கள் இன வழக்கப்படி ஊரின் திறந்தவெளியில் சாய்பாபாவின் உடலை நல்லடக்கம் செய்வதே சரி என்ற வாதத்தை அவர்கள் எழுப்பினர் . இதனை ஏற்காமல் வேறு எங்காவது அவரது உடலை நல்லடக்கம் செய்வதைத் தங்களால் ஏற்க முடியாது என்பதிலும் அவர்கள் பிடிவாதமாக இருந்தனர்.  இது ஏனைய பக்தர்களை குழப்பத்தில் ஆழ்த்தியது .

சாய்பாபாவின் உடலை நல்லடக்கம் செய்வதில் இரு கோஷ்டிகளாக அம்மக்கள் பிரிந்து தர்க்கத்தில் ஈடுபட்டதால் நல்லடக்கம் செய்வதில் கடும் சிக்கல் ஏற்பட்டது.  இந்த விவாதம் முடிவில்லாமல் நீண்டது மணித்துளிகள் போய்க்கொண்டே இருந்தன . சாய்பாபாவின் பூத உடல் அசைவின்றி அங்கேயே கிடத்தப்பட்டிருந்தது இதனால் அங்கு வழக்கமாக நடைபெறும் பூஜைகள் கூட நடத்தப்படாமல் ஸ்தம்பித்தது . பக்தர்கள் அனைவரும் மனத்தாங்கலுடன் வருத்தம் தோய்ந்தவர்களாக இரவும் பகலுமாய் மாறி மாறி கணவிழித்துக் காத்திருந்தனர் .  முடிவு காணப்படுவதில் காலதாமதம் ஏற்பட்டுக் கொண்ட இருந்தது .

அப்போது ,லட்சுமணன் மாமாவின் கனவில் சாய்பாபா தோன்றினார் . அவருக்கு கட்டளையும் இட்டார் .”சாய்பாபா சாகேப் ஆகிய நான் இறந்துவிட்டதாக அனைவரும் நினைக்கின்றனர் . அது உண்மையே .இனி அவர் வரமட்டார் .அதற்காக நீ ஏன் பூஜைகள் செய்வதை நிறுத்த வேண்டும்? உன் வழிபாட்டைத் தொடர்ந்து நடத்து அதற்கு எந்தத் தடையும் வராமல் நான் பார்த்துக் கொள்கிறேன் .அதனால் யாருக்கும் தீங்கு ஏற்படாமலும் நான் கவனித்துக் கொள்கிறேன். போ,உன் கடமையைச் செய் “என்றார்.

Sharing is caring!