சாய்பாபாவின் மகிமை!!!

சாய்பாபாவின் பக்தர், “நாராயண் ராவ்”  சாய்பாபா வாழ்ந்திருக்கும் போது மூன்றாண்டுகளுக்குப் பின்னர் அவர் சீர்டிக்கு வர விரும்பினார்.  ஆனால், வர இயலவில்லை. சாய்பாபாவின்,  மஹாசமாதியான ஓர் ஆண்டிற்குள் அவர் நோய்வாய்ப்பட்டு மிகவும் அவதியுற்றார்.  எல்லாவிதமான சாதாரண சிகிச்சைகளும் அவருக்கு பலன் அளிக்கவில்லை. எனவே, அவர் சாய்பாபாவை அல்லும், பகலும் தியானித்தார்.

ஒரு நாளிரவு கனவில், அவர் ஓர் காட்சி கண்டார். சாய்பாபா நிலவறை ஒன்றிலிருந்து வெளிவந்து அவருக்கு ஆறுதலளித்துக் “கவலைப்படாதே, நாளையிலிருந்து நீ குணமடைவாய். ஒரு வாரத்திற்குள் நன்றாக நடமாடுவாய்” என்று கூறினார். கனவில் குறிப்பிடப்பட்ட தினத்திற்குள் நாராயண் ராவ் பூரண குணமடைதார்.

இப்போது கருத்தில் கொள்ள வேண்டிய அம்சம் இதுதான் :  உடல் இருந்ததனால் சாய்பாபா வாழ்ந்து கொண்டிருந்தார். உடலை விட்டு விட்டதனால் இறந்து விட்டரா? இல்லை சாய்பாபா எப்போதுமே வாழ்கின்றார். ஏனெனில், ” பிறப்பு இறப்பு ” என்ற இருமையையும் கடந்தவர் அவர். எவனொருவன் ஒருமுறை முழு மனதுடன் அவரை நேசிக்கிறானோ அவன் , எந்த நேரத்திலும், எந்த இடத்திலும், அவரிடமிருந்து பதிலைப் பெறுகிறான். நமது அருகிலேயே அவர் எப்போதும் இருக்கிறார். எந்த ரூபத்தையும் எடுத்து கொள்கிறார். பிரிமுள்ள பக்தனிடத்துத் தோன்றி அவனை திருப்திப்படுத்துகிறார். சாய்பாபாவின்  மகிமையே மகிமை!!!  சாய்பாபாவின் மகிமை தொடரும்!!!!   ஒம் ஸ்ரீ சாய்ராம்.

Sharing is caring!