சாய்பாபாவைப் பட்டினி போட்ட பக்தர்…!

பண்டரிபுரத்தில் என்ற ஊரில் பசுவந்த்ராவ் என்பவர் வாழ்ந்து வந்தார். இவர் சாய்பாபாவின் தீவிர பக்தர். ஒரு நாள் ஷீரடிக்கு சாய்பாபாவை தரிசிக்க வந்தார். இவர் ஷீரடியில் உள்ள மசூதியில் அமர்ந்து பக்தர்களோடு பக்தர்களாய் சாய்பாபாவைத் தரிசனம் செய்து விட்டு, அவரின் பொன்மொழிகளைக் கேட்பதற்காக அங்கே அமர்ந்திருந்தார். சாய்பாபாவும் பல்வேறு கருத்துக்களை பற்றி விரிவாக உரையாற்றிக் கொண்டிருந்தார்.

அப்போது திடீரென்று, பசுவந்த்ராவை உற்று பார்த்த சாய்பாபா, பின்னர் பக்தர்களை நோக்கிப் பேசினார் . “இதோ இருக்கிறாரே, இவரின் தந்தை என்னுடைய  நெருங்கிய பக்தர். என் மீது மிகுந்த அன்பும், பிரியுமும் கொண்டவர். ஆனால், அவரது மகனான நீ  என் மீது துளியளவும் பாசம் கிடையாது.

எனக்குச் சாப்பாடு எதுவும் தருவதும் கிடையாது. எனக்கு நைவேத்தியமும் படைப்பது கிடையாது. இவரை மாற்ற வேண்டாமா ? அல்லது இவரது தந்தையைப் போலவே இவரையும் எனது நண்பனாக்கிக் கொள்ள வேண்டாமா ? அதற்காகத் தான் நான் ஷீரடிக்கு இவரை வரவழைத்தேன். இவர் என் மீது பாசமழை பொழிந்து எனக்குப் பூஜையும் செய்ய வைப்பேன் என்றார் சாய்பாபா. மேலும், எனக்குத் தினமும் நைவேத்தியம் படைக்க வைப்பது என்று முடிவெடுத்துள்ளேன். அதில் வெற்றியும் அடைவேன்” என்றார் சாய்பாபா.

உடனே அங்கு அமர்ந்து இருந்த பக்தர்கள் அனைவரும் பசுவந்த்ராவைத் திரும்பிப் பார்த்தனர். “ஏன் இப்படி நடந்து கொள்கிறாய்?” என்கிற கேள்வி அனைவரும் பசுவந்த்ராவை பார்த்து கேட்டனர். அதுவே பசுவந்த்திற்கு கூச்சத்தையும், வெட்கத்தையும் அளித்தது. ஆனாலும் சாய்பாபா எதைப் பற்றிச் சொல்கிறார் என்ற குழப்பத்தில் இருந்தார். அவர் சற்று நேரத்திற்கு பிறகே அவருக்கு உண்மை விளங்கியது.

எனது தந்தை உயிருடன் இருந்தவரை, பண்டரிபுத்தில் அமைந்திருக்கும் வீட்டில் சாய்பாபா பக்தராக இருந்தார். அவருக்கு முறைப்படி பூஜைகள், நைவேத்தியங்கள் தவறாது படைத்து வந்தார். ஒவ்வொரு நாளும் பகவானைத் தரிசனம் செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார். ஆனால், அவரது தந்தை இறந்த பிறகு, இந்த வழக்கங்கள் எதனையும் அவரது மைந்தனான பசுந்த்ராவ் கடைப்பிடிக்கவில்லை. அப்படியே அந்தரத்தில் விட்டுவிட்டார். ஆனால் சாய்பாபாவிற்கு அவரது தந்தை பூஜைகள் செய்ததோ, நைவேத்தியம் படைத்ததோ கிடையவே கிடையாது.

அப்படியானால்?

Sharing is caring!