சாய்பாபா ஒருபோதும் கைவிடமாட்டார்

சீரடியில் உள்ள சிறிய கிராமத்தில் வாழ்ந்து வந்தவர் செல்வந்தர் பாலாஜி. சிறிது நாள் முன்பே அவர் காலமாகிவிட்டார். அவருக்கு முதல் வருட திதி வந்தன. பாலாஜியின் மனைவி அவர்களின் உறவினர்களை இதில் பங்கேற்பதற்காக  அழைந்து இருந்தார். அதற்காக உணவு தாயார் செய்யப்பட்டிருந்தது. ஆனால் அவர்கள் எதிர்பார்த்திருந்ததைவிட ஏராளமானோர் அங்கு வந்து இருந்தனர். அதற்காக இவர்கள்  போதிய  உணவு தயார் செய்யப்படவில்லை. இதனால் பெரும் கவலை ஏற்பட்டது பாலாஜியின்  மனைவிக்கு. எப்படிச் சமாளிப்பது ? என்று மனகவலைஅடைந்தார் .

அதனை பார்த்த பாலாஜியின் தாயார், “ஒன்றும் கவலைப்படாதே. சாய்பாபா இருக்கிறார். அவர் அளித்த விபூதியை உணவுப் பாத்திரங்களில் சிறிது தூவு. சாய்பாபாவை மனதிற்குள் பிரார்த்தனை செய். அப்புறம் உணவைப் பரிமாறு சாய்பாபா காப்பாற்றுவார்”  என்று நம்பிக்கை அளித்தார். பாலாஜியின் மனைவியும், தனது தாயாரின் வாக்கை வேதமாக எடுத்துக் கொண்டு அப்படியே செய்தார்.

சாய்பாபாவை  நம்பினோர் என்றாவது கைவிடப் பட்டுள்ளனரா?  சில பேருக்காக சமைக்கப்பட்ட உணவு பல பேருக்கு பரிமாறப்பட்டது. அப்படியிருந்தும் உணவு மீந்து போனது .இந்த அதிசயம் சாய்பாபாவால் நிகழ்த்திக் காட்டப்பட்டது. சாய்பாபா மக்களுக்கு கூறிய பொதுவான உபதேசம் நம்பிக்கையும், பொறுமையும் ஆகும். அவர் மேல் நம்பிக்கை வைத்து நம் வேண்டுதலை சொன்னால், சாய்பாபா அதை நிறைவேற்றி வைப்பார்.

                                                                                                                    ஓம்ஸ்ரீசாய்ராம் !!!

Sharing is caring!