சாய் பாபாவின் யோகக்கலை!

சாய் பாபா வசித்த மசூதி பாழடைந்த பழைய கட்டிடமாகத்தான் இருந்தது. ஆயினும் அந்த மசூதியில் இருப்பதையே பாபா அதிகம் விரும்பினார். அங்குள்ள ஒரு மிகப்பழைய அறையில் தான் பாபா அமர்ந்திருப்பார்.  அவருக்கு எதிரே  துனி என்னும் ஹோம குண்டம் இருக்கும். அங்கு ஒரு மூலையில் கோதுமை, புகையிலை ஆகிய சாக்கு மூட்டைகள் வைக்கப்பட்டிருக்கும். மதிய உணவிற்குப் பிறகு சிறிது நேரம் ஆக்ர நெடுஞ்சாலையில் அமைந்துள்ள லெண்டி என்று அழைக்கப்படும் நந்தவனத்திற்குச் செல்வார்.

சில நாட்கள்  ரொட்டியை அவரே  சுட்டு எடுப்பதும் உண்டு. அவை  அத்தனை ருசியாக இருக்குமாம். மசூதிக்கு வெளியே இப்படி ஏறாளமான ரொட்டிகளை சுட்டு பக்தர்களுக்கு வழங்கிக் கொண்டே இருப்பார்.
இரவில் பக்தர்களுக்குப் பணத்தை அள்ளி  வழங்கும்கொடை வள்ளலாகவும் பாபா இருந்துள்ளார். தனது சட்டைப் பைக்குள் கையை நுழைத்து பணத்தை அள்ளி வழங்குவார். தனக்கு எவ்வளவு தேவை  என்பது
பக்தன் ஒருவன் விரும்புகிறானோ அந்த அளவு காசு அவனுக்குக் கிடைக்கும். இது பக்தர்களை  பெரிதும் மெய்சிலிர்க்கச் செய்யும்.

அந்த பக்தனுக்கு இவ்வளவுதான் தேவை என்பதை பாபா எப்படி
அறிந்துகொள்கிறார்? ஆச்சர்யம்…ஆச்சர்யம்!

தினமும் காலையில் எழுந்ததும் மசூதியில் உள்ள துனி அருகே போய் அமர்வார். அப்போது பக்தர்களிடம் இரவில் தான் வெகு தொலைவில் உள்ள பல்வேறு பிரதேசங்களுக்குச் சென்று வந்ததாகக் கூறி அதை விரிவாக
விவரிப்பார். இது கேட்டு அங்கு கூடியிருக்கும் பக்தர்கள் குழப்பத்தில் ஆழ்ந்து போய்விடுவர். காரணம் பாபா இரவு அங்கு அந்த மசூதியில் உறங்கிக்  கொண்டிருந்தது அவர்களுக்குத் தெரியும். அப்படி இருக்கும் போது  பாபா எவ்வாறு வேறு இடங்களுக்குச் சென்றிருக்க முடியும்? ஆனாலும்  பாபாவிடம் இது குறித்து எதிர்க்கேள்வி கேட்க முடியாமல் அவர்கள் மெளனித்துப் போவார்கள். எனினும் பாபாவின் செயல்கள் வியப்பைத் தருகிற விதத்தில் இருப்பதாக மசூதி அருகே உள்ள ஆசிரியர் ஒருவர் கூறியுள்ளார். இரவில் பாபாவின் அறையில் பல்வேறு மொழிகளில் பாபா யாருடனோ பேசிக் கொள்வதைப் பலமுறை கேட்டுள்ளதாக அவர் சொல்வார். பாபா சற்றும் அறிந்திராத ஆங்கில மொழியில் மிகச் சரளமாகப் பேசியதைத் தான் கேட்டதாக அவர் கூறுவது அனைவரையும் திகைப்படையச் செய்யும்.

அப்படியானால் இரவு நேரத்தில் வெகு தொலைவு பயணம்மேற்கொண்டு பலதரப்பட்ட மக்களைச் சந்தித்ததாக பாபா கூறுவது நிச்சயம் உண்மையாகத்தான் இருக்க வேண்டும் என்பதை பக்தர்கள்
உணரத்தொடங்கினர். அதுவே  அவர்களை  பாபாவின் அருகில் இன்னும் நெருக்கமடையச் செய்தது. தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும் ஹோமக் குண்டத்தின் அருகில் அமர்ந்து கொள்ளும் பாபா அடிக்கடி கைகளை  அசைத்தும் விரல்களை  விரித்து மூடியும் ஹக் என்று கூறுவார். ஹக் என்றால் கடவுள் என்று பொருள். இப்படி அவர் செய்வதற்கு என்ன அர்த்தம் என்பது எவருக்குமே புரியாது.

Sharing is caring!