சிக்கன், மட்டனை விட இந்த சைவ உணவுகளில் இவ்வளவு பலன்கள் கிடைக்குமா?

எவ்வளவு கொடுத்தாலும் சாப்பிட்டுக்கிட்டே இருக்கும் பலரை நாம் பார்த்திருப்போம். சாப்பாடு என்றால், மற்ற வேலைகளை கூட கண்டு கொள்ளாத அளவிற்கு சாப்பாட்டின் மீது அதீத காதல் பலருக்கும் உள்ளது.

சைவ உணவுகளை விட அசைவ உணவுகளின் மீது தான் பலருக்கும் விருப்பம் அதிகம்.

சிக்கன், மட்டன், பீப்ஃ போன்றவற்றை பார்த்து விட்டால் ஒரு கட்டு கட்டிவிடுவர். இது போன்ற அசைவ உணவுகளை விடவும் சைவ உணவுகளில் அதிக ஆரோக்கியம் உள்ளது என தற்போதைய ஆய்வுகள் சொல்கின்றன.

குறிப்பாக நாம் எப்போதாவது சாப்பிடும் உணவுகளை உதாரணத்திற்கு சொல்லலாம்.

பாதாம்

புரதசத்து அதிகம் நிறைந்த உணவுகளில் பாதமும் ஒன்று. 1 கப் பாதாமில் 12 கிராம் நார்ச்சத்தும், 264 மி.கி கால்சியமும், 3.7 மி.கி இரும்புச்சத்தும் உள்ளது.

மேலும், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களும் இதில் அதிகமாகவே இருக்கிறது. சிக்கன், மட்டனை விடவும் இதில் சத்துக்கள் நிறைந்துள்ளது.

பூசணி விதைகள்

சிக்கனில் உள்ள அதே அளவிலான சத்துக்கள் தான் பூசணி விதையிலும் உள்ளது. 1 கப் பூசணி விதையில் 18 கிராம் அளவு நார்ச்சத்துக்கள் உள்ளது. தினமும் சிறிதளவு பூசணி விதைகளை சாப்பிட்டு வந்தால் உடல் நலத்திற்கு நல்லது.

ஆளி விதைகள்

இரும்பு சத்து குறைபாடு உள்ளோருக்கு ஆளி விதைகள் சிறந்த தீர்வை தரும். 1 கப் ஆளி விதையில் 9.6 மி.கி அளவு இரும்புசத்து உள்ளது.

இவை மட்டனில் உள்ள இரும்புச்சத்தை விடவும் அதிகமானது. அத்துடன் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த மட்டனை விடவும் இது உதவுகிறது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஆரோக்கியம் முக்கியம்!

உண்ணும் உணவின் தரம் எப்போதுமே இன்றியமையாததாகும். கண்ட உணவுகளை சாப்பிட்டால் அவை நமது ஆரோக்கியத்தை நேரடியாக பாதித்து விடும். அசைவ உணவாக இருந்தாலும் அவற்றின் அளவு மிக முக்கியமானதாகும்.

அசைவ உணவில் இருக்க கூடிய சத்துக்கள் தான் இந்த வகை உணவுகளிலும் உள்ளது. உடல் எடையை குறைக்க விரும்புவோருக்கு இந்த உணவு வகை பெரும்பாலும் உதவும்.

Sharing is caring!