சித்தர்களின் தலைமையிடம் சதுரகிரி…

திருவண்ணாமலையில் பெளர்ணமியில் செல்லும் கிரிவலம் மனம் முழுக்க அமைதியையும் ஆன்மிகத்தையும் நிரப்பி விடும். அத்தகைய சிவமகிமையை எடுத்து சொல்லும் திருவண்ணாமலைக்கு இணையான அமைதியையும் நல்ல ஆன்மிக அனுபவத்தையும் தரும் இடமாக விளங்கும் சதுரகிரி மலை சித்தர்களின் தலைமையிடமாக சொல்லலாம்.

சதுரகிரி பெயருக்கேற்றபடி அமைந்திருக்கிறது. திசைக்கு நான்கு மலைகள் சிவகிரி, பிரம்மகிரி, விஷ்ணுகிரி, சித்தகிரி வீதம் பதினாறு மலைகள் சமமாக அமைந்து சதுரமாக காட்சியளிப்பதால் இது சதுரகிரி மலை என்றழைக்கப்படுகிறது. இம்மலையில் அமைந்திருக்கும் கோயிலை தரிசிப்பதற்காக பக்தர்கள் திரளாக கூட்டமாக வருகிறார்கள்

ஆன்மிகம், ஜோதிடம், மருத்துவம் என எல்லாம் உணர்ந்த ஞானிகளாய் இருந்தவர்கள் சித்தர்கள். இறைவனைக் காண விரும்புவர்கள் பக்தர்கள் என்றால் இறைவனைக் கண்டு மகிழ்ந்தவர்கள் சித்தர்கள்.

மலைப்பகுதியில் மூலிகைகள் நிறைந்த மலைக்குன்று ஒன்று உண்டு. இது சஞ்சீவி மலை என்றழைக்கப்படுகிறது. ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையைத் தூக்கி போகும் போது ஒரு பகுதி இங்கே விழுந்தது என்றும், அதனால் இந்தப் பகுதி மூலிகைகள் நிறைந்த வனமாக காட்சி அளிப்பதாகவும் கூறுகிறது.

அற்புத சக்திகள் நிறைந்த சித்தர்கள் வாழும் பூமியாக சதுரகிரியாக விளங்கியது. அமாவாசை, பெளர்ணமி தினங்களில் சித்தர்கள், ரிஷிகள் இங்குள்ள மகாலிங்கத்துக்கு பூஜை செய்ய வருகிறார்கள். நட்சத்திரங்கள் கூட்டம் கூட்டமாக மலைப்பகுதிகளில் விழும் அழகை காணவே பலரும் வரும் இடமாகவும் இது இருக்கிறது. மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ள இக்கோயிலுக்கு செல்ல  விருதுநகர் வத்திராய்ப்பு பகுதியிலிருந்து செல்வது எளிதாக இருக்கும்.

Sharing is caring!