சித்திரை நட்சத்திரக்காரர்கள் வணங்க வேண்டிய திருத்தலம்

சித்திரை நட்சத்திரத்தை பிறந்த நட்சத்திரமாக கொண்டவர்கள் செல்ல வேண்டிய தலம்  மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள குருவித் துறையில் வீற்றிருக்கும் சித்திரரத வல்லப பெருமாள் கோயில். குரு தன் மகனுக்காக வைகை நதிக்கறையில் நாராயணனை நினைத்து தவம் மேற்கொண்ட தால் இந்த இடம் குருவின் துறை ஆயிற்று. இவையே நாளடைவில் மருவி  குருவித் துறை ஆனது.

தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் நடந்த போரில் அசுரர்கள்  ஏராளமானோர் மாண்டார்கள். போரில் மாண்ட அசுரர்களை அசுரர்களுக்கு குருவான சுக்கிராச்சாரியார் ம்ருதசஞ்சீவினி மந்திரம் மூலம் உயிர் கொடுத்தார். இதைக் கண்ட தேவர்கள் குருவின் மகன், கசனை அழைத்து அசுர குருவிடம் சென்று ம்ருதசஞ்சீவினி மந்திரத்தைக் கற்று வரச் செய்தார்கள். சுக்கிராச்சாரியாரிடம் இருந்து கசன் மந்திரம் கற்றுக்கொண்டான். குருவின் மகள் தேவயானி கசனை விரும்பினாள். ஆனால் தேவர்கள் இந்த மந்திரத்தைக் கற்றுகொண்டதால்  தங்க ளுக்குத் தான் ஆபத்து என்று  நினைத்த அசுரர்கள் கசனை கொன்று சாம்பலாக்கி  சுக்கிராச்சாரியார் குடிக்கும் பானத்தில் கலந்துவிட்டார்கள்.

கசனை காணாத தேவயானி, தந்தையின் ஞான திருஷ்டியால் கசனைக் கண்டுபிடித்து தரும்படி தந்தையிடம் வேண்டினாள். கசன் தமது வயிற்றில் இருப்பதை ஞானதிருஷ்டியால் உணர்ந்த சுக்கிராச்சாரியார் கசனை உயிர்த்தெழச் செய்தார். குருவின் வயிற்றிலிருந்து வந்த கசன்  வயிற்றைப் பிளந்து வெளிவந்து சுக்கிராச்சாரியாரை உயிர்த்தெழச்செய்தான். அதே நேரம் குருவின் வயிற்றிலிருந்து வெளிவந்ததால் தேவயானி தங்கை என்னும் உறவு முறை என்று வாதிட்டு தேவலோகம் திரும்பினான். கோபமடைந்த தேவயானி கசனை ஏழு மலைகளின் உதவியுடன்  அசுர லோகத்தில் நிறுத்திவிட்டாள். மகனை மீட்டு கொடுக்க குரு பெருமாளிடம் தஞ்சம் அடைய பெருமாள் சக்கரத்தாழ்வாரை அனுப்பி  கசனை மீட்டார். பிறகு குருவின் வேண்டுதலுக்கு இணங்கி  இதே இடத்தில் எழுந்தருளினார்.

மகனை மீட்டுத் தர வேண்டிய  குருவுக்கு சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்தில் ஒரு சித்திரைத் தேரில் பெருமாள் காட்சித் தந்தததால் சித்திரரத வல்லபபெருமாள் ஆனார். அதனால் தான் இத்தலமானது சித்திரம் நட்சத்திரத் துக்கு உரிய தலமாயிற்று.

இத்தலத்தில் மூலவர் சித்திரரத வல்லப பெருமாள். தாயார் ஸ்ரீதேவி, பூமாதேவி. மூலவர் 10 அடி உயரத்தில் ஆஜானுபாகுவாக சங்கு சக்கரதாரியாக ஸ்ரீதேவி, பூதேவியுடன் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். இவர் சந்தனத்தாலான திருமேனியைக் கொண்டிருப்பதால் இவருக்கு அபிஷேகம் கிடையாது. தைலக் காப்பு மட்டும்தான் சாற்றப்படுகிறது. மூலவரை வணங்கினால் குருபகவானின் அருளை பெறலாம்.  குருபகவான் சக்கரத்தாழ்வார் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார். இங்கு குருபகவான் யோக குருவாக அருள்பாலிக்கிறார். குருவுக்கே பாதிப்பு நீக்கிய தலம் என்பது விசேஷம். பிரகாரத்தில் யோக நரசிம்மரும், பன்னிரு ஆழ்வார்களும் சன்னிதியில் அருள் பாலிக்கிறார்கள்.

சித்திரை  நட்சத்திரக்காரர்கள் வாழ்நாளில் தாங்கள் பிறந்த ஜென்ம நட்சத்திரத் தன்று  சித்திரரத வல்லபபெருமாளைத் தரிசித்தால் வாழ்வில் இன்னல்கள் நீங்கி, குருவின் அருளையும் பெறலாம். தடைப்பட்ட  திருமணப்பேறை குருபகவான் பார்வை  நீக்கிவிடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. குழந்தைப்பேறும் வாழ்வில் சகல சம்பத்துக்களையும் பெறுவதற்கு  இத்தல இறைவன் அருள்புரிகிறான்.

Sharing is caring!