சிரிக்கும் குபேரனின் சிலையை இப்படி வைத்தால் உங்கள் வீட்டிற்கு அதிஷ்டம் அடிக்குமாம்….!!

அதிர்ஷ்டத்தை கொண்டு வரவும், துரதிர்ஷ்டத்தை தவிர்க்கவும் நமது வீட்டில் சிரிக்கும் குபேரன் சிலை அல்லது பொம்மைகளை வைப்பது ஒரு வழக்கம்.

சிரிக்கும் குபேரன் சிலையின் மகிழ்வளிக்கும் தோற்றம் நம்மை அதிகமாக மகிழ்வித்து, வாழ்க்கையிலுள்ள அழுத்தங்கள் மற்றும் துன்பங்களை போக்கும்.அப்படிப்பட்ட சிரிக்கும் புத்தரை வீட்டில் வைப்பதற்கு பயனுள்ள சில டிப்ஸ்கள் உள்ளது. உங்களது நிலை மற்றும் எதிர்ப்பார்ப்புகளுக்கு ஏற்ப, அவரை எங்கே வைக்கலாம் என்பதைத் தேர்ந்தெடுங்கள்.கிழக்கு திசையில் வைத்தல் வீட்டின் கிழக்கு திசை தான் குடும்பத்தின் அதிர்ஷ்ட புள்ளியாக கருதப்படுகிறது. அதனால் உங்கள் குடும்பத்தில் ஒற்றுமையும் சந்தோஷமும் நிலவ வேண்டும் என்றால் சிரிக்கும் குபேரன் சிலையை வீட்டின் கிழக்கு திசையில் வைத்திடவும்.பொதுவாக குடும்பத்திற்குள் உள்ள குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே சச்சரவு, வாக்குவாதம் மற்றும் சண்டைகள் அடிக்கடி ஏற்பட நேரிடலாம். வீட்டில் இருப்பதற்கே உங்களுக்கு பிடிக்காமல் இருக்கலாம். அப்படிப்பட்ட நேரங்களில், இவரை கிழக்கு திசையில் வைப்பதால், உங்களுக்கு போதிய நிவாரணத்தை அது அளிக்கும்.

தனிப்பட்ட ஷெங் சி திசையில் வைத்தல்: ஃபெங் ஷுய் மரபில் ஒவ்வொரு தனிப்பட்ட நபருக்கும் ஒரு குறிப்பிட்ட திசை, அவருக்கான தனிப்பட்ட ஷெங் சி திசையாக வழங்கப்படும். சிரிக்கும் குபேரன் சிலையை வீட்டில் இந்த திசையில் வைத்தால் செல்வம் பெருகுவதிலும், ஒட்டு மொத்த நலனிலும், வாழ்க்கையில் வெற்றி கிட்டுவதிலும் உதவிடும்.அதே போல் தனி நபரின் இலக்கை நோக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், நேர்மறையான விளைவுகளை கொண்டு வரவும் கூட இது ஆதரவாக இருக்கும்.தென் கிழக்கு திசையில் வைத்தல்:சிரிக்கும் குபேரன் சிலையை அறை, ஹால், படுக்கையறை அல்லது உணவருந்தும் அறையின் தென் கிழக்கு திசையில் நீங்கள் வைத்தால், மிகுதியான அளவில் எதிர்ப்பாராத அதிர்ஷ்டத்தையும், வீட்டின் வருமானத்தை உயர்த்திடவும் அவர் உதவிடுவார்.சிரிக்கும் குபேரன் சிலையை தென் கிழக்கு பகுதியில் வைத்தால், உயர்ந்த பதவிகளில் வசிப்பவர்களும், அரசியலில் ஈடுபட்டுள்ளவர்களும் தங்கள் எதிரிகளின் நடவடிக்கைகளைத் தடுக்கும் ஆற்றலை பெறுவார்கள். இந்த திசையில் வைப்பது மன அழுத்த நிவாரணியாக செயல்பட்டு, மனநிலையை மேம்படுத்தும்.

வேலை மேஜையின் மீது வைத்தல்:சிரிக்கும் குபேரன் சிலையை அலுவலக மேஜையின் மீதோ வீட்டிலுள்ள வேலை மேஜையின் மீதோ வைத்தால்இ உங்களுக்கு தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் கிட்டும்.மாணவர்கள் இச்சிலையை தங்களின் படிப்பு மேஜையின் மீது வைத்துக் கொண்டால், தங்களது கல்வி செயல்திறனில் அதிக செறிவு ஏற்படும்.கவனச் சிதறல் இல்லாமல் அவர்களால் மனதை ஒருநிலைப்படுத்தி படிக்க முடியும். அதேப்போல் இதனை உங்களது அலுவலக மேஜையின் மீது வைக்கும் போது உடன் பணிபுரிபவர்கள், கீழ்மட்ட ஊழியர்கள் மற்றும் மேல்மட்ட ஊழியர்களிடம் சண்டை சச்சரவுகள் தடுக்கப்படும்.

Sharing is caring!