சிறந்த மன ஆரோக்யம் வேண்டுமா? அப்போது உணவை இந்த முறையில் எடுத்துக்கொள்ளுங்கள் !

உடல் ஆரோக்யத்தை போலவே மன ஆரோக்யமும் மிகவும் முக்கியமான ஒன்றாகும். நல்ல ஆரோக்யம் பல உடல் சார்ந்த பிரச்னைகளையும் தவிர்க்க உதவுகிறது. இத்தகைய மன ஆரோக்யத்தை பெற உணவை எப்படி சாப்பிடலாம் எனப் பார்க்கலாம்…

காய்கறிகள் மற்றும் பழங்களை பச்சையாக சாப்பிடுவதே மன ஆரோக்யத்தை பாதுகாக்க கூடிய வழி என குறிப்பிடுகின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள். காய்கறிகள் மற்றும் பழங்களை சமைத்து சாப்பிடுவதனால் அதன் முழு சத்துக்களும் கிடைக்காமல் போகக்கூடுமாம்.

நியூசிலாந்து மற்றும் அமெரிக்காவை சேர்ந்த 18 முதல் 25 வயதுள்ள இளைஞர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வின் படி பச்சை காய்கறிகள் மற்றும் பழங்களை உட்க்கொள்பவர்களை விட பிற உணவுகளை சாப்பிடுபவர்கள் மன ஆரோக்யத்தில் மிகவும் பின் தங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த ஆராய்ச்சியின் படி பச்சையாக சாப்பிடுவது எதிர்மறை எண்ணம், மன சோர்வு, நாள் பட்ட நோய்கள்  போன்றவற்றிலிருந்து தப்பிக்க உதவுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

Sharing is caring!