சிறுநீரக கற்களை கரைப்பதற்கு உகந்த பானம்

சிறுநீர் எரிச்சல், நீர்க்கடுப்பு மற்றும் சிறுநீரகக் கற்கள் கரைய உதவும் இந்த சூப். உடல் பருமன், கொலஸ்ட்ராலை குறைக்கும். இந்த சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்

தேவையான பொருட்கள் :
வாழைத்தண்டு – 1,இஞ்சித் துருவல், சீரகத்தூள், மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
வாழைத்தண்டில் நாரை எடுத்துவிட்டு பொடியாக நறுக்கி கொள்ளவும்.நறுக்கிய வாழைத்தண்டுடன் இஞ்சித் துருவல், உப்பு, 4 டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.தண்டு நன்றாக வெந்ததும் அதில் உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்க்கவும்.சிறிதளவு பால் சேர்த்தும் பரிமாறலாம்.சூப்பரான வாழைத்தண்டு சூப் ரெடி.

Sharing is caring!