சிறுநீரக கற்கள் ஏற்படுவதை எப்படி தடுப்பது?

சிறுநீரகக்கல் என்பது, சிறிய படிகங்களை கொண்ட ஒரு திடப்பொருள் ஆகும்.

சிறுநீரகத்திலோ அல்லது சிறுநீரகக்குழாயிலோ ஒரே நேரத்தில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கற்கள் இருக்கும்.

இது நீராகாரங்கள் குறைவாக எடுத்துக் கொள்வது, அசைவ உணவுகளை அதிகமாக உட்கொள்வது, காளான், காலிபிளவர், முட்டைக்கோஸ், தக்காளி, கீரை வகைகளை அதிகமாக உட்கொள்வதால், சிறுநீரக கற்கள் ஏற்படுகின்றன.

மக்கள் தொகையில், 15 – 20 சதவீதம் பேர் சிறுநீரகக் கல் நோயால் பாதிக்கப்படுகின்றனர் என கூறப்படுகின்றது.

அதில் இரண்டு அல்லது மூன்று மடங்கு அதிகமாக ஆண்களுக்கு ஏற்படும். இது சாதாரணமாக, 20 முதல் 30 வயதுடையவர்களுக்கு ஏற்படுகின்றது.

இருப்பினும் சிறுநீரகத்தில் கல் உருவானதை ஆரம்பக்கட்டத்திலேயே கண்டறிந்துவிட்டால் குணப்படுத்தி விடலாம்.

அந்தவகையில் சிறுநீரக கற்கள் ஏற்படுவதை எப்படி தடுப்பது? அதன் அறிகுறிகள் என்னென்ன என்பதை இங்கு பார்ப்போம்.

சிறுநீரக கற்கள் ஏற்பட்டதற்கான அறிகுறிகள் என்ன?
 • பின்பக்க விலாவில் வலி அல்லது முதுகுவலி,
 • ஒரு பக்கம் அல்லது இரண்டு பக்கத்திலும் அதிகரிக்கும் வலி.
 • குமட்டல், வாந்தி.
 • அடிக்கடி சிறுநீர் கழித்தல்.
 • சிறுநீர் அளவு அதிகரித்தல்.
 • சிறுநீரில் ரத்தம் காணப்படுதல்.
 • அடிவயிற்றில் வலி, வலியோடு சிறுநீர் கழித்தல்.
 • இரவு நேரத்தில் அதிகளவு சிறுநீர் கழித்தல்.
 • சிறுநீரின் நிறம் இயற்கைக்கு மாறாக காணப்படுதல்.
சிறுநீரக கற்கள் ஏற்படுவதை எப்படி தடுப்பது?
 • அதிக அளவு தண்ணீர் உட்கொள்ளுதல் அவசியம்.
 • பொதுவாக ஒரு நாளைக்கு, 6 முதல் 8 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
 • சிறுநீரக கற்களின் தன்மையை பொருத்து, மருத்துவரின் ஆலோசனையின்படி, மருந்தோ அல்லது பிற முறைகளையோ கையாள வேண்டும்.
 • அசைவ உணவு தவிர்க்க வேண்டும்.
 • கோஸ், காலிபிளவர், கத்திரிக்காய், தக்காளி போன்றவை தவிர்க்க வேண்டும்.
 • டீ, காபி போன்றவை அருந்துவதை குறைக்க வேண்டும். பால் தேவைக்கு ஏற்ப எடுத்துக் கொள்ளலாம்.
 • மது பழக்கம் இருந்தால் அதனை தவிர்க்கவும்.
இதற்கு என்ன சிகிச்சைகள்?
 • ESWL (அதிர்ச்சி அதிர்வு அலைகள் மூலம் கல் உடைத்தல்)
 • PCNL (சிறுநீரக துளை மூலமாக கல்லை உடைத்தல்)
 • MICRO -PCNL (நுண் – சிறுநீரக துளை மூலமாக கல்லை உடைத்தல்)
 • RIRS (சிறுநீரக உள் நோக்கி மூலமாக சிறுநீரகத்தில் உள்ள கற்களை உடைத்தல்)
 • URS : (யுரேட் ரோஸ் கோபி)
 • அறுவை சிகிச்சை

Sharing is caring!