சிவனுக்கு இதைக்கொண்டு அபிஷேகம் செய்தால் இவற்றை பெறலாம்!

சைவர்கள் வழிபாட்டில் முக்கிய கடவுளாக சிவபெருமான் வணங்கப்படுகிறார். சைவர்கள் மட்டுமின்றி, சனாதன தர்மம் எனப்படும் ஹிந்து தர்மத்தினை கடைபிடிக்கும் அனைவருமே, சிவனை ஆதி யோகியாகவும், திரிசூல நாதராகவும், அர்த்தநாரி பெருமையாகவும், காலனின் பிடியிலிருந்து நம்மை காப்பவராகவும் பெரிதும் கொண்டாடி மகிழ்கின்றனர்.

எப்போதும், ஆழ் நிலை தியானத்தில் இருக்கும் சிவன், அவ்வப்போது, ஆனந்த கூத்தும், ருத்ர தாண்டவமும் ஆட மறப்பதில்லை. முப்பெரும் தேவர்களில் அழிக்கும் தொழிலுக்கு அதிபதியான சிவன் ஓர் அபிஷேக பிரியன். அவரை வகை வகையான அபிஷேகங்களால் குளிர்வித்தல், நம் பாவங்களையும், துயரங்களையும் அளித்து நமக்கு முக்தி அளிப்பார் என்பது முன்னோர் வாக்கு.

அதன்படி, சிவனுக்கு அபிஷேகம் செய்யும் ஒவ்வொரு திரவியங்களுக்கும், ஒவ்வொரு பலன் உள்ளது.அதை பற்றி தெரிந்து கொள்வோம்.

சிவனை தூய நல்லெண்ணையில், வாசனை திரவியங்கள் கலந்து அபிஷேகம் செய்தால், நோயற்ற வாழ்வு கிடைக்கும்.சுத்தமான பசுவின் கறந்த பாலில் அபிஷேகம் செய்தால், தீர்க்க ஆயுள் கிடைக்கும்.

சுத்தமான தேன் கொண்டு அபிஷேகம் செய்தால், குயிலினும் இனிய குரல் கிடைக்கும்.
சர்க்கரையினால் அபிஷேகம் செய்தால் மனநிறைவு உண்டாகும்.

 இளநீர் அபிஷேகம் செய்தால் பேரானந்தம் கிட்டும்.
பஞ்சமிர்தத்தால் அபிஷேகம் செய்தால் சகல காரியங்களில் வெற்றி கிடைக்கும்.

தயிர் அபிஷேகம் செய்தால் சம்பத்து கிடைக்கும்.
கரும்புச்சாறு அபிஷேகம் செய்தால் உடல் வலிமை பெறும்.

Sharing is caring!