சீக்கிரமே ஆற்றல் தரும் சீரகத்தண்ணீர்..

தாகமெடுக்கும்போதெல்லாம் தண்ணீர் குடிக்கிறோம்.என்ன தண்ணீர் குடிக்கிறோம்.ஒன்று கேன் வாட்டர் இல்லையென்றால் ஆர்.ஓ. வாட்டர் அல்லது கார்ப்பரேஷன் வாட்டர். குடிக்கும் நீரில் சத்து இருக்கிறதோ இல்லையோ அதையும் சத்தாக்கி நம்மால் குடிக்கமுடியும் என்பது தெரியு மா?  என்னவென்று கேட்கிறீர்களா அதுதான் சீரகத்தண்ணீர்.

சீர்+ அகம்= சீரகம், அகத்தை சீர் செய்யும்  பொருள் இது என்பது குறிப்பிடத் தக்கது. முன்னோர்கள் தங்கள் சமையலறையில் வைத்திருக்கும் அஞ் சறைப் பெட்டியில் இருக்கும் உணவு பொருள்கள் சுவைக்காக மட்டுமல்ல ஆரோக்யத்துக்காகவும் வைக்கப்பட்டிருக்கும். அவற்றில் ஒன்றுதான் சீரகம்.

சீரகத்தை உணவில்சேர்ப்பது போலவே சீரகத்தை தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால் உடலுக்கு அதிக நன்மை தரும். தினமும் ஒரு பாத்திரத்தில் தண்ணீருடன் சீரகத்தைச் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி வைக்கவும். சீரகம் தரும் நன்மைகள் குறித்து பட்டியலே போடலாம். என்ன வென்று பார்க்கலாமா?

 உடலில் நோய் எதிர்ப்புசக்திகளை அதிகரிக்கும் வல்லமை வாய்ந்தது சீரகம். இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும் சீரகத்தண்ணீர்.

உயர் இரத்த அழுத்தத்தைக் கொண்டிருப்பவர்கள் சீரகத் தண்ணீரைக் குடித்தால் இதில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தைச் சீராக வைத்தி ருக்கும். இந்த பொட்டாசியம் கல்லீரலுக்கும், பித்தபைக்கும் பலம் சேர்க்கிறது. உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற சீரகம் பெரிதும் துணை புரிகிறது.

உடலுக்கு தேவையான இரும்புச்சத்து சீரகத்திலும் உண்டு. அன்றாடம் சீரக நீரை எடுத்துக்கொள்வதன் மூலம் உடலுக்கு தேவையான இரும்புச் சத்து நிறைவாக கிடைக்கிறது. ஹீமோகுளோபின் குறைபாட்டால் இரத்த சோகை, சுவாசக்குழாயில் பிரச்னை, சளி, இருமல் போன்ற பிரச்னை கள் அவ்வப்போது படுத்தினால் தொடர்ந்து சீரக நீரை எடுத்துவந்தால் விரைவில் குணமடைவதைக் கண்கூடாக பார்க்கலாம்.

Sharing is caring!