சீன வாஸ்து…ஆன்மீகமும் விஞ்ஞானமும்

விஞ்ஞானம் சொல்லும் உண்மைகளைப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அறிந்து கொண்டவர்கள் நம் முன்னோர்கள்… இயற்கையோடு இணைந்து, உடலுக் கும் மனதுக்கும் ஆரோக்யமானவற்றையும்  நிச்சயமாக கடைப்பிடிக்க வேண்டும் என்னும் வழக்கத்தைக் கொண்டிருந்தார்கள். தங்களுக்கு பின்னால் வரும் சந்ததியினரும் இதைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்காகத்தான்  மன அமைதியை அளிக்கும் ஆன்மிக வழியையும், இறைவன் என்னும் பக்தியையும் தொடர்புபடுத்தி வழிபாடுகளை உருவாக்கினார்கள். அவற்றை மெய்பிக்கும் வித மாக பல அறிவியல்  உண்மைகள் நம்மை ஆச்சரியத்துக்கு உள்ளாக்குகின்றன.

ஆன்மிக ரீதியாக…

அன்றாடம் கோயிலுக்குச் செல்லவில்லையென்றாலும் வாரம் ஒருமுறை யாவது கோயிலுக்குச் செல்வதைக் கட்டாயமாக்கி கொண்டிருந்தார்கள் நம் முன்னோர்கள். ஆலய தரிசனத்தில் இறைவனை உருகி  ஒருமுகமாக வேண்டும் போது  பூஜையில் கோயிலில் கண்டாகமணி சப்தமாக ஒலிக்கும்.  பிற சத்தங்கள்  கோயில் மணி ஓசையில் அடங்கிவிடும். திருநாவுக்கரசர் சிவப்பெருமானை ’ஓசை ஒலியெலாம் ஆனாய் போற்றி’ என்று இறைவன் நாததத்துவமாக  இருப்பதைப்  பாடுகிறார்.

இன்றும் பல இடங்களில்  ஆலயங்களில் ஒலிக்கப்படும் மணியோசை ஆலயங்களைச் சுற்றியிருக்கும் நூற்றுக்கணக்கான வீடுகளில் நாதமாக ஒலிக்கிறது.  மணி ஓசை நமது உளவியலுடன் ஆழ்மனத்தோடு தொடர்பு உடையவை.  கேட்மியம், ஈயம், துத்தநாகம், நிக்கல், மங்கனம், குருமம் மற்றும் தாமிரம் போன்ற உலோகங்களின் கலவையால் மணி உருவாக்கப்படுகின்றன. தனித் துவமிக்க உலோகங்கள் ஒவ்வொன்றும் அதற்கேற்ப தனி குணாதிசியங்களைப் பெற்றி ருக்கிறது. இந்த உலோகங்களின் சக்திகள் அனைத்தும் ஒன்றாக வெளிப்படும் ஆற்றலே மணி ஓசை. இறைவனிடத்தில் புற உலகை மறந்து மன அமைதியை உண்டாக்கி இறைவனிடத்தில்  மனம் லயிக்க செய்வதற்கு ஆலய மணி ஓசை நாதமே சிறந்தது…

விஞ்ஞான ரீதியாக…

மணியின் ஓசை மூளையில் செயல்பாட்டை அதிகரிக்கிறது. மணியின் ஓசையில் இருக்கும் அழுத்தமானது நமது மனதுக்குள் ஊடுருவி மூளையின் இடது, வலது பாகங்களைத் தூண்டுகின்றன. எந்த ஒரு செயலையும் கூர்ந்து கவனிக்கும் ஒரு மித்த ஆற்றலை செய்ய மூளையின் செயல்பாடு அவசியம். மனிதனுக்குள் இருக்கும் ஏழு சக்கரங்களையும் தூண்டும் அளவுக்கு  மணி யோசை  7 விநாடிகளுக்கு மூளைக்குள் நின்று எதிரொலியை உண்டாக்குகிறது. இந்த ஒலியால் மனம் வெற்றிடமாக்கப்பட்டு  மனது அதிகம் கிரஹிக்கும் தன்மையைக் கொண்டு  செயல்படும் ஆற்றலை ஏற்படுத்துகிறது.

ஆலயங்களிலும், வீடுகளிலும்  மணிஓசைகள் அசைந்து இனிய நாதமாக கேட்கும் போது மகிழ்ச்சியும் அமைதியும் ஆற்றலும் குடிக்கொள்ளும்என்று முன்னோர்கள் அன்று சொன்னதைதான் இன்று சீனவாஸ்து என்று சொல்லிக்கொண்டு இருக்கிறோம்.

ஆன்மிக விஷயங்களை  அலட்சியப்படுத்தாதீர்கள். அது விஞ்ஞானத்துடன் தொடர்பு உடையது.

Sharing is caring!