சுதந்திரமாக செயல்பட விரும்பும் மிருக சீரிட நட்சத்திரக்காரர்கள்..!

நட்சத்திர வரிசையில் ஐந்தாவதாக இருக்கும் நட்சத்திரம் மிருக சீரிடம். இந்நட்சத்திரத்தைக் கொண்டவர்கள் இரண்டு ராசிகளுக்குள்  ஏதேனும் ஒன்றில் அடங்குவார்கள்.  மூன்று நட்சத்திரங்களைச் சேர்த்த நட்சத்திரக்கூட்டம் கொண் டவை. ம்ருக என்றால் மான்.. சீர்ஷம் என்றால் சிரசு என்று பொருள்.. மானின் தலையைப் போல் கொண்டிருப்பதால் இது மிருகசீர்ஷம் என்ற பெயர் பெற்றது…

இந்நட்சத்திரத்தின்  முதல் மற்றும் இரண்டாவது பாதங்களைக் கொண்டவர் கள் ரிஷப ராசியிலும், மூன்று மற்றும் நான்காம்  பாதங்களைக் கொண்டவர்கள் மிதுன ராசியையும் கொண்டிருப்பார்கள்.

மிருக சீரிடம் நட்சத்திரத்தின் முதல் பாதத்தைக் கொண்டவர்களான  நீங்கள் சூரியனை அதிபதியாக கொண்டிருப்பீர்கள்.. எப்போதும் சவாலான  காரியங்க ளில் ஈடுபடுவதையே விரும்புவீர்கள். போராடியாவது நினைத்ததை அடையும் குணம் கொண்டவர்கள் நீங்கள்.  பிறரிடம் பணியாற்றுவதை விட சொந்தத் தொழில் புரிவதையே விரும்புவீர்கள். உடன் பிறந்தவர்கள், சுற்றம், நட்பு அனை வரிடமும் பாசம் காட்டி பழகுவீர்கள். திட்டமிட்டு செயல்படும் குணத்தை இயல்பாகவே பெற்றிருப்பீர்கள்..

மிருக சீரிடம் நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தைக் கொண்டவர்கள் புதனை அம்சமாக கொண்டவர்களே.. நல்லவர்களோடு இன்புற்று வாழவே விரும்பு வீர்கள்..  அதிர்ந்து பேச தெரியாத அமைதியான பேர்வழி நீங்கள். உழைத்து வெற்றிக்கனியை பெற விரும்பும் நீங்கள் பலருக்கும் ஆலோசனை சொல்வதில் வல்லவராக இருப்பீர்கள். எல்லா இடங்களிலும் மதிப்பும் மரியாதைக்கும் முக் கியத்துவம் கொடுக்கும் நீங்கள் பணத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க மாட்டீர் கள்…

மிருக சீரிடம் நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தைக் கொண்டிருக்கும் நீங்கள் சுக்கிரனை அதிபதியாக கொண்டிருப்பீர்கள். எதிலும் திருப்தி என்று புன்னகை யோடு அழகே உருவாய் வளைய வரும்  நீங்கள் சச்சரவு மிக்க இடங்களில் செல்ல விரும்பமாட்டீர்கள்.. குடும்பத்தோடு இணக்கமாக இருக்கும் நீங்கள் தெய்வபக்தியையும் கொண்டு விளங்குவீர்கள். எப்போதும் மகிழ்ச்சியை விரும் பும் நீங்கள் உங்களைச் சுற்றியிருப்பவரையும் மகிழ்ச்சியாக வைத்திருப்பீர்கள்.

மிருக சீரிடம் நட்சத்திரத்தின் நான்காம் பாதத்தைக் கொண்டிருக்கும் நீங்கள் செவ்வாயை அம்சமாக கொண்டிருப்பீர்கள். பொறுப்புமிக்கவர்களாக இருப்பீர்கள். கல்வியில் சற்றே ஆர்வம் குறைந்தவராக இருந்தாலும் சோர்வடையாமல் எப் போதும் சுறுசுறுப்பாக  வளையவருவீர்கள்.. எப்போதும் நேர்மையாக இருக்கவே விரும்புவதால் உங்களைச் சுற்றி இருப்பவர்கள் மத்தியில் உங்கள் செல்வாக்கு உயரும்.

மிருக சீரிட நட்சத்திரத்தைக் கொண்டவர்களான நீங்கள்..  உங்களையும் மகிழ்ச்சியாக வைத்திருந்து உங்களைச் சுற்றி இருப்பவர்களையும் மகிழ்ச்சியாக வைத்திருப்பீர்கள்.  திட்டமிட்டு செயல்படும் நீங்கள்  பிறரிடம் அன்பாக நடந்து கொள்வதையே விரும்புவீர்கள். சுதந்திரமாக செயல்படவே விரும்புவீர்கள்.

Sharing is caring!