சுப்ரபாதம் இறைவனை எழுப்பவா? மனதில் இறை உணர்வை எழுப்பவா?

கெளசல்யா சுப்ரஜா ராமபூர்வா ஸ்ந்த்யா
ப்ரவர்த்ததே உத்திஷ்ட தரசார்ந்தூல
கர்த்தவியம் தைவ மாவஹ்நிகம்

மஹாவிஷ்ணு….நொடிப்பொழுதும் உறங்காமல் நம்மை காத்தருளுகிறார் என்னும் போது அவரை துயிலெழுப்ப அன்றாடம் சுப்ரபாதத்தை பாடி அதை அவர் கேட்டு துயில் எழுவதாக சொல்கிறோம். வைணவத்தலங்கள் அனைத்திலும் அதிகாலை வேளையில் திருப்பள்ளி எழுச்சி என்று சுப்ரபாதத்தை பாட விடுவார்கள். இறைவன் உறங்குவதில்லை. ஆனால் அதிகப்படியான அன்பை இறைவன் மீது வைத்திருப்பதால் அவனை ஒரு குழந்தையாக பாவித்து துயிலெழுப்புகிறோம்…

விஸ்வாமித்திரர் இராமர் இலட்சுமணனை எழுப்புவதற்காக இதைப் பாடியதாக கூறுகிறார்கள். இப்பாடலை இயற்றியவர் அண்ணங்க ராச்சாரியார் என்றும் சொல்கிறார்கள். சுப்ரபாதம் என்று அழைக்கப்படும் இந்த வார்த்தை வடமொழி எழுத்து.. சுப்ரபாதம் என்றால் இப்பொழுது நற்பொழுதாகட்டும் என்று அர்த்தம்..

எப்போதும் இறைவனை நினைத்துக்கொண்டிருக்க வேண்டும் என்று சொல்வார்கள். சதா சர்வகாலமும் இறைவனை மனதில் நிறுத்தி வழிபட வேண்டும் அதற்கு ஈடு கொடுக்கும் வகையில் இறைவழிபாட்டில் இறைவனை வழிபட மந்திரங்களையும், மனமுருகி வாழ்வில் வளம் தரவேண்டும் என்னும் பாடல்களையும் இயற்றினார்கள்.

அதிகாலை வேளையில் வீடுகளில் ஒலிக்கும் சுப்ரபாதம் மனதுக்கு அமைதியையும், வீட்டில் நேர்மறை சக்திகளையும் தக்கவைக்கிறது. மனம் எத்துணை சங்கடங்களைக் கொண்டிருந்தாலும் சுப்ரபாதம் கேட்கும் போது இயல்பாகவே இறைவனை வழிபட தூண்டுகிறது. காலை வேளையில் மனம் அமைதியாக இருக்கும் நேரத்தில் எந்த செயலில் இறங்கினாலும் நாட்டம் அதிகரிக்கும் என்பதால் அதிகாலை இறைவனை துயிலெழுப்ப திருப்பள்ளியெழுச்சி பாடும்போது மனமும் தூய்மையான மனதுடன் இறைவனுடன் சங்கமிக்கிறது.

பகவானின் மந்திரத்தைச் சொல்லி வழிபடுவர்களுக்கு எல்லாமே வெற்றிதான். காலையில் கண் விழிக்கும் போது நாராயணனை நினைத்து வழிபட வேண்டும் .இரவில் சிவப்பெருமானை நினைத்து வழிபட்டு உறங்க வேண்டும் என்று சொல்வார்கள்..
சுப்ரபாதம் உறங்கிக் கொண்டிருக்கும் இறைவனை எழுப்பவே என்று  சொன்னாலும் அதிகாலை வேளையில் மனதில் இருக்கும் ஆன்ம உணர்வை தட்டி எழுப்புகிது என்றே சொல்ல வேண்டும்….

Sharing is caring!