சுப்ரமணியருக்கு மிஞ்சிய தெய்வம் இல்லை

தகப்பனுக்கே பாடம் சொன்ன சாமியா முருகனை.. சுப்ரமணியனை.. வணங்கினால் கிடைக்கும் பேறு அளவிட முடியாதது. ஆறுமுகம் கொண்ட ஷண்முகனை திருச்செந்தூர் புராணத்தில் அழகாக குறிப்பிட்டிருக்கிறார்கள்.

ஷடரிம் ஷட்விகாரம் ஷட்கோசம் ஷட்ரஸம் தத்
ஷட் ஸூத்ரம் ஷண்மதம் ஷட்வேதாங்கம் ஷண்முகம் பஜே

ஷடரிம்:
மனிதர்களிடம் இருக்கும் ஆறு தீய குணங்களைப் போக்குபவன் என்று சொல்கிறார்கள். காமம், குரோதம், லோபம், மதம், மாத்சர்யம், மோகம் போன்றவையே அவை.

ஷட்விகாரம்:
இருத்தல், உண்டாக்குதல், அழித்தல், வளர்த்தல், குறைதல், மாற்றமடைதல் என ஆறுசெயல்களை அற்றவன் என்று பொருள்படும்.

ஷட்கோசம்:
அன்னமய, பிராணமய, மனோமய, விஞ்ஞானமய, ஆனந்தமய, அதீதமய என்று ஆறு நிலைகளிலும் இருப்பவன் ஆறுமுகன் என்று சொல்வார் கள்.

ஷட்ரசம்:
ஆறுவகையான இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, உறைப்பு, துவர்ப்பு, கார்ப்பு போன்ற சுவைகளை உள்ளடக்கியவன் சுப்ரமணியன்.

Sharing is caring!