சுவையான பழக்கூழ் கலவையை செய்வது எப்படி?.!!

நாம் தினமும் நமது குழந்தைகளுக்கு ஒரே விதமான உணவுகளை செய்து வழங்கினால்., உணவுகளுக்கு மீதுள்ள வெறுப்பானது ஏற்படும். இதனை குறைப்பதற்கு குழந்தைகளுக்கு நல்ல ஆரோக்கியமுள்ள உணவுகளை விதவிதமாக மாற்றி செய்து கொடுத்தால்., உங்களின் மீதும் உணவுகளின் மீதும் பிரியம் ஏற்படும்.

தேவையான பொருட்கள் : 

ஆப்பிள் – பாதியளவு.,
துருவிய தேங்காய் – 1 தே.கரண்டி.,
சர்க்கரை – 1 தே.கரண்டி.,
வாழைப்பழம் – ஒன்று.,
கெட்டித் தயிர் – 1 கிண்ணம்.,

உலர்திராட்சை – 1 தே.கரண்டி.,
பாதாம் மற்றும் முந்திரி துருவல் – ஒரு தே.கரண்டி.,
நறுக்கிய செர்ரி பழம் – ஒரு தே.கரண்டி.,
நறுக்கிய பேரீச்சை – ஒரு தே.கரண்டி…

செய்முறை: 

முதலில் எடுத்துக்கொண்ட தோலினை சீவி தனியாக எடுத்து கொள்ளவும். பின்னர் வாழைப்பழத்தை சிறிய அளவிலான வட்டமாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் தயிருடன் சர்க்கரையை சேர்த்து நன்றாக கலக்கவும். பின்னர் அதில் மீதமுள்ள செரி பழம்., பாதம் மற்றும் முந்திரி துருவல்., பேரிச்சை., உளர் திராட்சை என அனைத்தையும் சேர்த்து சாப்பிட்டால் உடலுக்கு குளிர்ச்சியும் கிடைக்கும்.

Sharing is caring!