செப்டம்பர் மாதம் யாருக்கு அதிர்ஷ்டம்?

மேஷம்

மேஷம் ராசிக்காரங்க ரொம்ப சுறுசுறுப்பானவங்க நீங்க. வேகமானவங்க காரணம் செவ்வாய் உங்க ராசி அதிபதி. கிரகங்கள் சஞ்சாரம் அற்புதமாக இருக்கு. எதையும் தைரியமாக செய்வீங்க. பூர்வ புண்ணியாதிபதி ஆட்சி பெற்று நான்கு கிரகங்கள் கூட்டணியில் இருப்பதால் வியாபாரம் சிறப்பா இருக்கும். கடன் வாங்க வேண்டாம். மனதில் விரும்பியவரை திருமணம் முடிப்பீர்கள் சிலருக்கு திருமணம் நிச்சயமாகும். மாத பிற்பகுதியில் கணவன் மனைவி உறவில் விட்டுக்கொடுத்து போங்க. தேவையில்லாத வாக்கு வாதம் செய்ய வேண்டாம். காதலிப்பவர்கள் கவனம், இல்லாவிட்டால் பிரிவு வரும்.

ரிஷபம்

அழகானவர்கள் நீங்க காரணம் உங்க ராசி அதிபதி சுக்கிரன் அற்புதமாக இருக்கிறார். இரண்டாம் வீட்டில் ராகு இருப்பதால் பேச்சில கவனமாக பேசுங்க. வேலை செய்யிற இடத்தில தேவையில்லாம பேசாதீங்க. சனி உங்க வாக்கு ஸ்தானத்தை பார்ப்பதால் பிரச்சினை வரும். சிம்மத்தில் இருக்கிற சுக்கிரன் மாத பிற்பகுதியில் கன்னிராசிக்கு நகர்ந்து கூட்டணி சேருகிறார். அங்கிருக்கும் புதனோடு இணைந்து நீச பங்க ராஜயோகம் அடைகிறார் எனவே பிரச்சினையில் இருந்து தப்புவீர்கள். 25 ஆம் தேதிக்கு மேல் உணர்ச்சி வசப்பட்டு எதையும் முடிவு செய்ய வேண்டாம். பெண்களே அறிமுகம் இல்லாத ஆண்களிடம் எச்சரிக்கையாகவும் ஜாக்கிரதையாக இருங்க.

மிதுனம்

உங்க தைரிய ஸ்தானம் நல்லா இருக்கு எடுத்த காரியங்கள் நல்லா நடக்கும். ஆசிரியர்கள், மீடியாவில வேலை செய்யிறவங்களுக்கு ரொம்ப நல்ல மாதம். மிகச்சிறந்த யோகங்கள் நடைபெறும். உங்க ராசி அதிபதி புதன் ஆட்சி உச்சம் அடையப்போகிறார். கூடவே சுக்கிரன் இணைவதால் பிசினஸ்ல லாபம் வரும். தொழில்ல லாபம் வரும். ரொம்ப அற்புதமான மாதம். உடல் நலத்தில அக்கறையோட இருங்க. எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசிச்சு முடிவெடுங்க. கணவன் மனைவி விட்டுக்கொடுத்து போங்க இல்லாட்டி கொஞ்சும் கஷ்டம்தான்.

கடகம்

தன வாக்கு ஸ்தானம் ரொம்ப வலிமையாக இருக்கு. உங்க பேச்சுக்கு ரொம்ப மதிப்பு இருக்கும் பணவரவு அற்புதமாக இருக்கும். சாமர்த்தியமாக பேசுவீர்கள். சூரியன், புதன் இணைவதால் வருமானம் கூடும். மகிழ்ச்சியான கால கட்டம் குடும்ப வாழ்க்கையில் உற்சாகம் கூடும் முகத்தில் அழகும் பொலிவும் கூடும். வேலையில கவனமாக இருங்க. முதுகு நோய் வரும் எச்சரிக்கை காரணம் வேலைப்பளு அதிகரிக்கும். உடல் நலத்தில முக்கியத்துவம் கொடுத்து எச்சரிக்கை பண்ணுங்க. பணம் விரையமாகும். பணம் முதலீடு செய்யும் போது கடக ராசிக்காரங்க கவனம். மாத பிற்பகுதியில் கிரகங்கள் இடமாற்றம் சில மாற்றங்களையும் மகிழ்ச்சியையும் தரும். வாட்ஸ்அப் சேட்டிங்கில் கவனம் பிற ஆண்களுடன் பழகும் போது கவனமாக இருங்க.

சிம்மம்

சிம்ம ராசிக்காரங்களே மாத தொடக்கத்திலேயே உங்க ராசியில நான்கு சிரகங்கள் இருப்பதால் யோகம்தான் உங்களுக்கு. நல்ல வேலை கிடைக்கும், பணவருமானம் அபரிமிதமாக இருக்கு. சிலர் விலை கூடிய செல்போன் வாங்குவீங்க. கார், பைக் வாங்குவீங்க. மாத பிற்பகுதியில உங்க ராசியில் இருந்து கிரகங்கள் இரண்டாம் வீடான கன்னிக்கு போறதால கல்யாண யோகம் கூடி வருது. கல்யாண கனவுகள் கை கூடி வரும். காதல் மலரும் நன்மைகள் நிறைந்த மாதம். பெண்கள் உற்சாகமாக இருப்பீங்க. இல்லத்தரசிகள் வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். சிம்ம ராசிக்காரர்கள் இந்த மாதம் உற்சாகமாக இருப்பீர்கள் உடல் நலத்தில கொஞ்சம் கவனம் வையுங்க.

கன்னி

கன்னி ராசிக்காரங்களே இந்த மாதம் நீங்க விரைய செலவுகள் வரும், காரணம் உங்க ராசிக்கு விரைய ராசியில் நான்கு கிரகங்கள் இருக்கு. மாத பிற்பகுதியில நல்ல நிலைமை ஏற்படும் காரணம் உங்க ராசிநாதன் ஆட்சி உச்சம் பெற்று உங்க ராசியில அமர்கிறார். மாத பிற்பகுதியில் நல்ல வாய்ப்புகள் வரும். பேச்சிற்கு நல்ல மதிப்பு மரியாதை கிடைக்கும். தொழிலதிபரிகள், எழுத்தாளர்கள், பேச்சாளர்களுக்கு அற்புதமான மாதம். மாணவர்களுக்கு வெற்றிகரமான மாதம். படிக்க நல்ல ஸ்கோப் இருக்கு வெற்றிகள் தேடி வரும். வெளிநாடு வாய்ப்பு கை கூடி வரப்போகிறது உற்சாகமான மாதம்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களே உங்க ராசி நாதன் சுக்கிரன் லாப ஸ்தானத்திலும் அப்புறம் விரைய ஸ்தானத்திற்கும் வருகிறார்கள். நல்ல மாற்றங்கள் வரும். வெளிநாட்டு வாய்ப்புகள் வரும். வேலையில் மாற்றம் வரும். உங்க தைரிய ஸ்தானத்தில் சனியும் கேதுவும் இருக்கின்றனர். ரொம்ப அற்புதம். குருவால் புதிய வேலையும் அதிக வருமானமும் வரும் நீங்க எதிரின்னு நினைச்சவங்க மூலம் கூட வருமானமும் திடீர் அதிர்ஷ்டமும் வரும். இந்த மாதம் நல்ல மாதம் குடும்ப உறுப்பினர்கள் அன்பாகவும் ஆதரவாகவும் இருப்பார்கள். உங்களின் நண்பர்களை கவனிங்க அவங்க கூட சேர்ந்தீங்கன்னா நீங்களும் பிரச்சினையில் சிக்குவீங்க ஜாக்கிரதை.

விருச்சிகம்

செவ்வாயை ராசி நாதனாகக் கொண்ட விருச்சிக ராசிக்காரர்களே… அற்புதமான மாதம் இது. வெளிநாடு யோகம் கைகூடி வரப்போகுது. எதையும் தைரியமாக செய்யுங்க. காரணம் கிரகங்கள் சஞ்சாரமும் கூட்டணியும் அற்புதமாக இருக்கிறது. நிறைய சர்ப்ரைஸ் கிடைக்கப் போகிறது. வெளிநாடு சென்று படிக்கப் போகிறீர்கள். பல திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தி முன்னேறுவீர்கள். புரமோசனுடன் வருமானம் கூடும். வேலையில் இடமாற்றம் வரும். கவுரவ பதவிகள் தேடி வரும் நல்ல செய்திகளை கேட்பீர்கள். வண்டி வாகனத்தில் போகும் போது கவனமாக இருங்க. இல்லறம் நல்லமாக மாறும் மாதம் செப்டம்பரில் உற்சாகமாக வலம் வாங்க.

தனுசு

குருபகவானை ராசி நாதனாகக் கொண்ட உங்களுக்கு தலைமேல் கத்தி தொங்குவது போல பிரச்சினை இருந்து கொண்டே இருக்கிறது. இனி கவலைகள் பிரச்சினைகள் தீரப்போகிறது. குருவினால் இப்போதே நன்மை தரப்போகிறார். உடல் நலப்பிரச்சினைகள் இந்த மாதம் தீரும். பெண்களுக்கு பல நன்மைகள் ஏற்படப்போகிறது. குடும்ப வாழ்க்கையில் நிம்மதி பிறக்கப் போகிறது. நல்ல வேலை கிடைக்கும். பெண்கள் பிற ஆண்களுடன் பழகும் போது பாதுகாப்பாக இருங்க இல்லாட்டி சிக்கலில் கொண்டு போய் விடும்.

மகரம்

சனியை ராசி நாதனாகக் கொண்ட உங்களுக்கு எட்டாவது வீட்ல சூரியன், சுக்கிரன், புதன், செவ்வாய் என நான்கு கிரகங்கள் கூடி கும்மியடிக்குது. என்னடா இது மகர ராசிக்கு வந்த சோதனை என்று நினைக்க வேண்டாம். மாத முற்பகுதியில் ஜாக்கிரதையாக இருக்கணும் மக்களே. உடம்புலயும் மனசுலயும் கவனமாக இருங்க. வண்டி வாகனத்தில கவனமாக இருங்க. பயணங்களில் கவனம் இல்லாட்டி விபத்தில சிக்கணும். மாத பிற்பகுதியில கிரகங்கள் இடமாறுவதால பிரச்சினைகள் குறையும். அப்பாவோட உடம்புல கவனம் செலுத்துங்க. பிசினஸ்ல வருமானம் சும்மா பிச்சிக்கிட்டு போகும். நல்லதை மட்டுமே நினைங்க நல்லதே நடக்கும் மக்களே.

கும்பம்

சனியை ராசி நாதனாகக் கொண்ட கும்பம் ராசிக்காரங்களே… இந்த மாதம் முற்பகுதியில ஏழாவது வீடான சிம்மத்தில நான்கு கிரகங்கள் கூட்டணி சேருகின்றன. புகழும் செல்வம் செல்வாக்கு கூடும். வெளிநாட்டு வேலை கிடைக்கும். மாத பிற்பகுதியில எட்டாவது வீட்ல கிரகங்கள் கூட்டணி சேருவதால் வீட்டில் குழப்பங்கள் அதிகரிக்கும் கவனமாக இருங்க. இந்த மாதம் தொழில் வியாபாரத்தில கவனம் தேவை. நல்ல தனவரவு கிடைக்கும். உங்களின் அலுவலகத்தில் பொருட்களை பத்திரமா பாத்துங்க. உடல் நலத்திலும் அக்கறை காட்டுங்க இல்லாட்டி பெட்ல படுக்கப் போட்ரும் எச்சரிக்கை.

மீனம்

குருவை ஆட்சி நாதனாகக் கொண்ட மீனம் ராசிக்காரர்களே… உங்களுக்கு இருந்த தடைகள் நீங்கும். வெளிநாடு செல்லும் யோகம் வரும். மாத முற்பகுதியில் கவனம். உடம்புல கவனம் தேவை. கூட இருப்பவங்களே எதிரிகளாக மாறுவாங்க. வேலைப்பளு அதிகமாகவே இருக்கும். இந்த மாதம் ஏழாம் வீட்டில் புதன் சுக்கிரன் சேருவதால் நீச பங்க ராஜயோகத்தால் திருமண முயற்சிகள் கை கூடி வரும். முகூர்த்தம் சிறப்பாக நல்லதாக பார்த்து வையுங்கள். சிலருக்கு வீடு சொத்து வாங்கக் கூடிய நேரம் கை கூடி வரப்போகிறது. நல்ல வேலை கிடைக்கும். கவுரவம், புகழ் அந்தஸ்து பெருகும். வேலை செய்பவர்களுடன் கவனமாக இருங்க. கணவன் மனைவி உறவு இந்த மாதம் ரொம்ப ரம்மியமாக இருக்கும்.

Sharing is caring!