செய்த பாவங்கள் விலக…..

நாம் வாழ்க்கையில் பூர்வஜென்ம காலத்தில் செய்த ஒருசில பாவங்கள் நம்மை விட்டு போகாமல் அடுத்த ஜென்மத்திலும் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

இதனால் நம் வாழ்வில் எடுக்கும் முயற்சிகளில் பல தடைகள் ஏற்பட்டு மனக் கவலைகளுடன் இருக்க தோன்றும்.

இதற்காக என்ன பரிகாரம் செய்வது என்று புரியாமல் குழப்பத்தில் இருப்போம்! இதோ அதற்கான சூப்பர் பரிகாரம்.

ஒரு சிறிய உருளியை எடுத்துக் கொண்டு அதில் முக்கால் பாகத்திற்கு நல்லெண்ணெய் அல்லது நெய்யை உருக்கி ஊற்ற வேண்டும்.

புதிய துணியை எடுத்து அதை பெரிய திரியாக உருட்டி நெய்க்கு நடுவில் வைத்து தீபம் ஏற்ற வேண்டும்.

இந்த தீபத்தை கையில் ஏந்தியபடி வைத்துக் கொண்டு, இந்த தீபத்தில் திருப்பதி ஏழுமலையான் ஒளி வடிவில் இருப்பதாக மனதில் நினைத்துக் கொள்ள வேண்டும்.

பின் துளசி மற்றும் மலர்களைத் தூவி ஏழுமலையான் குறித்த திவ்ய பிரபந்தப் பாடல்களை பாட வேண்டும்.
மேலும் இந்த தீபத்தை காலை முதல் மாலை வரை அணையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

தீபம் ஏற்றி முடிந்ததும், மாவிளக்கு, சர்க்கரைப் பொங்கல், வடை, எள் சாதம் போன்றவற்றை சாமிக்கு வைத்து படைத்து, நைவேத்தியம் செய்ய வேண்டும்.

பிரார்த்தனை முடிவில் ஏழை எளிய மக்களுக்கு ஆடைகளை தானமாக வழங்க வேண்டும். இந்த பரிகாரத்தினால் நம்முடைய பூர்வஜென்ம பாவங்கள் விலகி நல்ல பலன்கள் கிடைக்கும்.

Sharing is caring!