செவ்வாய் தோஷம், நாக தோஷம், கிரக தோஷம் நிவர்த்தி செய்யும் அத்ரி மலை…

தியானம் செய்யுங்கள் உங்களை உணர்வீர்கள்ஆன்மிக ஞானத்தையும் பெறுவீர்கள் என்று சொல்கிறார்கள் சித்தர்களும்முனிகளும், ஞானிகளும். அதிகாலை எழுந்து இறைவனை நினைத்து வழிபடும் தியானத்துக்கு ஆற்றல் அதிகம் என்பதும்குறிப்பிடத்தக்கது. தியானம் செய்யலாம் ஆனால் தியானம் பழக்குவதற்கு மன அமைதி வேண்டுமே என்று நினைப்பவர்கள் முதலில் அத்ரி மலை சென்றுவாருங்கள்தியானம் கைகூடும். கிரக தோஷங்கள் நிவர்த்தி ஆகும். வாழ்வில் சந்தோஷம்அதிரிக்கும்எங்கே இருக்கிறது அத்ரி மலை.

பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் என்று சொல்வார்கள். சித்தர் களால் பெருமை பெற்ற மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரின் ஒரு பகுதிதான் அத்ரி மலை என்று அழைக்கப்படுகிறது. அத்ரி மாமுனிவர் இங்கு அவருடைய சீடர்களுடன்வசித்த இடம் இது என்பதால் இம்மலை அத்ரி மலை என்றழைக்கப்படுகிறதுஇந்த மலையில் அத்ரி முனிவர்கோரக்கர்பிருகு முனிவர் போன்ற சித்தர்கள் தவம்புரிந்து உள்ளார்கள்அகத்தியர் பொதிகை மலையில் இருந்துதான் தமிழ்வளர்த்ததாக கூறுகிறார்கள்.

சித்திர சிகண்டிகள் என்று அழைக்கப்படும் ஏழு ரிஷிகளில் ஒருவராகஇருப்ப வர் அத்ரிஉலகுக்கு வேதமந்திரங்களை வழங்கிய ரிஷிகளில்இவருக்கு முக்கி யப் பங்குண்டுரிக்அஜூர்சாமஅதர்வண வேதமானநான்கில் ரிக் வேதத்தின் பல காண்டங்களை அத்ரிமக்ரிஷிதான்தபோவலிமையால் கொடுத்தார்இவர் ஜோதிடம்ஆயுர்வேதம் நூல்களையும் இயற்றியுள்ளார்அத்ரி மாமுனிவர் பதஞ்சலிமகரிஷிக்கு குருவாக இருந்து மானுட சரீர ரகசியங்களை கற்றுக் கொடுத்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் அம்பா சமுத்திரத்திலிருந்து தென்காசி செல்லும் வழியில் கடனா அணையை அடைந்துஅங்கிருந்து கிமீட்டர் அடர்ந்த காடுகளுக்குள் பயணிக்க வேண்டும்போகும் போது அத்ரி கங்கா நதியை தாண்ட வேண்டும்வழியில் சித்தர்கள் வாழ்ந்த அடிச்சுவடு களைக் காணலாம்போகும் வழியில் இந்து அறநிலையத்துறையின்பராமரிப்பில் அனுசுயாதேவிஅத்ரி மகிரிஷி ஆசிரமம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கோரக்க மகரிஷிக்காக அத்ரி மகரிஷி உருவாக்கிய கங்கா நதி இன்றளவும் தெளிந்த நீரோடையாக வற்றாத சுனையாகஉள்ளதுஅகத்தியர்கோரக்கர் இணைந்த கோயில் அமைந்திருக்கிறதுசித்தர்கள் தியானம் செய்த இந்த இடத்தில்அமர்ந்து கண் மூடி தியானம் செய்யும் போது மன அமைதி கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கைஇங்கு செய்யும்சிவவழிபாடு விசேஷமிக்கது.

Sharing is caring!