ஜலதோஷம், தலைவலி, உடம்புவலி , அலுப்பு நீங்க , அஜீரண கோளாறு நீக்கும் பொடி

இந்த பொடியை தயார் செய்துவைத்து, நமக்கு தேவையான நேரத்தில் அருந்தலாம்.

இந்த சுக்கு காபி ஜலதோஷம், தலைவலி, உடம்புவலி , அலுப்பு நீங்க , அஜீரண கோளாறு போன்றவற்றுக்கு சரியான முதல் உதவியாக பயன்படும். தயாரிப்பு முறையை தொடர்ச்சியை கீழே வாசியுங்கள்…

தேவையான பொருட்கள் :-

  • சுக்கு தூள் – 1/2 கப்
  • கொத்தமல்லி விதை -1/4 கப்
  • குரு மிளகு -1 தேக்கரண்டி
  • சீரகம் -1/2 தேக்கரண்டி
  • பனை வெல்லம் (அ) கருப்பட்டி-தேவையான அளவு

செய்முறை

  1. ஓரு வடச்சட்டியில் எண்ணெய் விடாமல், கொத்தமல்லி விதைகளை சிறுதீயில் மணம் வீசும் வரை வருத்து கொள்ளவும்.
  2. பிறகு அதில் குரு மிளகு மற்றும் சீரகம் சேர்த்து நன்றாக மணம் வீசும் வரை வதக்கவும்.
  3. சுக்கு முழுதாக வாங்கி காயவைத்து பொடி செய்தும் பயன்படுத்தலாம் அல்லது சுக்கு தூளையும் பயன்படுத்தலாம்.
  4. இப்பொழுது வறுத்து ஆற வைத்த இந்த பொருட்களை மிக்ஸியில் சேர்த்து நன்றாக பொடியாக நைசாக அரைத்து கொள்ளவும். பிறகு நன்கு ஆறவைத்து அதை எவர்சில்வர் டப்பாவில் போட்டு சேமித்து வைத்து கொள்ளவும்.
  5. இந்த பொடியை உபயோகித்து, நமக்கு தேவையான நேரத்தில், தேவையான அளவில், பனை வெல்லம் அல்லது கருப்பட்டி சேர்த்து இந்த காபியை எடுத்து கொள்ளலாம்.

Sharing is caring!